அப்போது வானில் தோன்றிய அசரீரி, கடவுள் வெளியில் தெரியாதவண்ணம் சந்தனத்தால் மறைத்து வழிபடுமாறு கட்டளையிட்டது. வருடத்தில் ஒருமுறை மட்டுமே அதாவது விகாச மாதம் மூன்றாவது நாள் கடவுளின் நிஜ உருவத்தை வழிபட வேண்டும் என்றும் அது கூறியது. அசரீரியின் கட்டளைப்படி, கடவுளின் சிலையிலிருந்து நீக்கப்பட்ட மண்ணின் அளவிற்குச் சந்தனம் தயாரித்து கடவுளை மூடியதுடன், கோயிலையும் புதிதாகக் கட்டினான் புருரவா. அன்றுமுதல் அசரீரியின் கட்டளைப்படி வழிபாடு நடந்து வருகிறது. சிம்மாச்சல மலையில் ஸ்ரீ வராக லட்சுமி நரசிம்ம சுவாமி வீற்றிருக்கிறார். கோயிலின் முக்கியத்துவம்!ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வடக்காக 16 கிலோ மீட்டர் தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிம்மாச்சலம் உலகிலேயே மிகவும் பழமையான கோயில். மலையின் வடக்கு உச்சிக்கு அருகில் சரிவான நிலப்பரப்பில் அமைந்துள்ள நரசிம்மன் கோயிலால்தான் இம்மலைக்குச் சிம்மாச்சலம் என்று பெயர் வந்தது. கோயிலிற்குச் செல்லும் வழிநெடுக மா, பழா, அன்னாச்சி உள்ளிட்ட பழ மரங்கள் நிறைந்துள்ளன. ஆயிரக்கணக்கான கல் படிகளைக் கடந்துவரும் பக்தர்களுக்கு இம்மரங்கள் புத்துணர்வு அளிக்கின்றன. படிகள் தகுந்த இடைவெளியுடன் சிரமத்தைக் குறைக்கும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையும், வழிபாட்டிற்குரிய பிற மாதங்களிலும் பக்தர்களின் வருகை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கிறது.
எப்படி அடைவது!
சாலை மார்க்கமாக: விஜயவாடாவில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவிலும், ஹைதராபாத்தில் இருந்து 650 கிலோ மீட்டர் தொலைவிலும் விசாகப்பட்டினம் அமைந்துள்ளது. ஹைதராபாத், விஜயவாடா, புவனேஷ்வர், சென்னை, திருப்பதி ஆகிய நகரங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
ரயில் மார்க்கமாக: சென்னை- கொல்கட்டா ரயில் மார்க்கத்தில் விசாகப்பட்டினம் ஒரு வணிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகும். புது டெல்லி, சென்னை, கொல்கட்டா, ஹைதராபாத் நகரங்களில் இருந்து நாள்தோறும் விரைவு ரயில் போக்குவரத்து உண்டு.
விமான மார்க்கமாக: ஹைதராபாத்தில் இருந்து தினமும், சென்னை, புது டெல்லி, கொல்கத்தா நகரங்களில் இருந்து வாரத்திற்கு மூன்று முறையும் விமானப் போக்குவரத்து உள்ளது.