சிவபெருமானின் புண்ணியத் தலங்களான பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்களில் முதன்மையானதாகவும், தொன்மையானதாகவும் கருதப்படும் ஸ்ரீ சோமநாதர் திருக்கோயில் நமது நாட்டின் மேற்கு எல்லையோரத்தில் அரபிக் கடற்கரையில் அமைந்துள்ளது.
கந்தபுராணம், ஸ்ரீமத் பாகவதம், சிவபுராணம் போன்ற புராணங்களின் மிகத் தொன்மையானதாகக் குறிப்பிடப்பட்டுள்ள இத்திருத்தலத்தை கங்கையுடனும், யமுனையுடனும் கிழக்கு நோக்கிப் பாய்ந்த சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளுக்கு ஈடான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தலமாக ரிக் வேதத்தில் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.
இத்திருக்கோயிலுக்கு தலப்பெருமையும், தீர்த்த பெருமையும் உண்டு. இத்திருக்கோயிலின் மீது கஜினி முகமது ஆறு முறை படையெடுத்து கொள்ளையடித்துச் செல்லுமளவிற்கு செல்வச் செழிப்பு கொண்டதான இத்திருக்கோயில், தனது பாரம்பரிய பெருமையையும், ஆன்மீக முக்கியத்துவத்தையும் இன்று வரை இழக்காமல் தன்னகத்தே கொண்டு இந்தியாவின் ஆன்மீகப் பாரம்பரியத்தின் உன்னத சின்னமாகவும், நமது நாட்டின் ஆன்மீக பண்பாடு கொண்ட சமூக ஒற்றுமையும் கொண்டுள்ளது.
தற்போதுள்ள இத்திருக்கோயில் ஏழாவது முறையாக கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.
கடைசியாக இத்திருக்கோயில் கட்டப்பட்ட முறை கைலாச மகா மேரூ போன்ற வடிவத்தில் கட்டப்பட்டது. இம்முயற்சிக்கு முன்னோடியாக இருந்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல்.
150 அடி உயரமுடைய கோபுரத்தைக் கொண்ட இத்திருக்கோயில், கர்பக்கிரகம், சபா மண்டபம், நிருத்திய மண்டபம் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டதாகும்.
webdunia photo
WD
கோயில் கோபுரத்தில் உள்ள கலசம் மட்டும் 10 டன் எடை கொண்டது. இங்குள்ள கொடிக்கம்பம் 27 அடி உயரம் கொண்டது.
இங்கிருந்து தென்துருவத்திற்கு எவ்விதத் தடையும் இன்றி செல்வதற்கான வழியை இங்குள்ள த்ரிஸ்தம்பம் உள்ளது.
திருத்தல வரலாறு
சோமா என்ற பெயர் சந்திரனைக் குறிக்கிறது. இவர் தக்ஷ்னின் மருமகன். தனது மாமனார் இட்ட கட்டளையை ஒரு முறை மருமகன் சோமா கடைபிடிக்காததால் கோபம் கொண்ட தக்ஷ்ன், நீ மறைந்து போகக் கடவாய் என்று சாபமிட்டார்.
webdunia photo
WD
அதுவரை ஒவ்வொரு இரவும் ஒளி உமிழிந்து மிளிர்ந்து கொண்டிருந்த சந்திரனின் வடிவம் தேய ஆரம்பித்தது. அது முழுமையாகத் தேய்வதற்குள் கடவுள்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து சாபத்தை திரும்பப் பெறுமாறு தக்ஷ்னை வேண்டினர். சோமனை சரஸ்வதி நதி கடலில் கலக்கும் இடத்திற்குச் சென்று நீராடி சாப விமோசனம் பெருமாறு தக்ஷ்ன் கட்டளை இட்டான். அந்த கட்டளைக்கு இணங்க நீராடி சிவபெருமானை வழிபட்ட இடமே சோமநாதர் ஆலயமானது.
எனவே இங்கு சந்திரனுக்கு அருளிய சிவபெருமான் சோமனா என்ற நாமத்துடன் அழைக்கப்படுகின்றார்.
அங்கு செல்வது எப்படி
சாலை மார்கமாக
மும்பையில் இருந்து சோம்நாத்திற்கு விமானம் மூலம் கேஷோட் என்ற இடத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து சோமநாதர் ஆலயம் 55 கி.மீ. தூரத்தில் உள்ளது.
webdunia photo
WD
பேருந்து, வாடகைக் கார் சேவைகளும் உள்ளன.
ரயில் மார்கமாக
அகமதாபாத் செல்லும் ரயில் பாதையில் உள்ள வேராவால் என்ற ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து சோமநாதர் கோயில் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது.
சாலை மார்கமாக
அகமதாபாத்திலிருந்து 400 கி.மீ. தூரத்திலும் போர்பந்தரில் இருந்து 128 கி.மீ. தூரத்திலும், மும்பையில் இருந்து 889 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
தங்கும் வசதி
புகழ்பெற்ற தங்கும் விடுதிகளின் கிளைகள் சோம்நாத்தில் உள்ளன. ஏராளமான விருந்தினர் மாளிகைகளும் உள்ளன.