இசை மன்னர் பாடுக் பைரவ் கோயில்

Webdunia

ஞாயிறு, 4 நவம்பர் 2007 (16:14 IST)
webdunia photoWD
லக்னோவில் உள்ள பாடுக் பைரவ் கோயிலில் கடந்த ஞாயிறன்று பதாவ் என்ற சிறப்பு விழா நடைபெற்றது. இசை இரவான அன்று பலரும் இங்கு வந்து தங்களது இசைப் பயிற்சிகளை துவக்கினர்.

லக்னோவின் கனசர்பக் என்ற இடத்தில் அமைந்துள்ளது பாடுக் பைரவ் கோயில். பாடுக் பைரவ் இசையின் மன்னர் என்று இந்த மக்களால் நம்பப்படுகிறார்.

தங்களது பிரார்த்தனைகளை வேண்டிக் கொள்ளவும், இசைப் பயிற்சியை துவக்கவும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகின்றனர்.

முந்யை காலத்தில் இப்பகுதி கதக் கரனா என்று அழைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பைதவ் என்ற சிறப்பான விழா இங்கு கொண்டாடப்பட்டுள்ளது. அன்றைய தினம் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த கோயிலுக்கு வந்து தங்களது இசைப் பயிற்சியைத் துவக்குவதுதான் இந்த விழாவின் சிறப்பு.

webdunia photoWD
மேலும், கடவுள் படுக் பைரவருக்கு நிவேதனமாக சோமபானம் என்று அழைக்கப்படும் மதுவையே பக்தர்கள் படைக்கின்றனர்.


webdunia photoWD
கடந்த ஞாயிற்றுக் கிழமை பாதவ் விழா நடைபெறுவதற்கு முன்புதான் கோயில் சீரமைக்கப்பட்டது. கடந்த 33 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பகுதி மீண்டும் தன் பொலிவைப் பெற்றது. மற்ற கோயில் விழாக்களை போல் அல்லாமல் இந்த விழா வேறுபட்டு ஆனால் சிறப்பாக நடைபெறும்.

பல்வேறு இடங்களில் இருந்து சிறுவர், சிறுமியர்களும், துறவிகளும் இந்த விழாவில் பங்கேற்பர். பல பக்தர்கள் படுக் பைரவருக்குப் பிடித்தமான மதுபானத்தை கொண்டு வருவர். அது கடவுளுக்குப் படைக்கப்பட்டப் பின் துறவிகளுக்கும், பக்தர்களுக்கும் அளிக்கப்படும்.

இந்த கோயில் இருக்கும் பகுதியில் நாய்கள் பல கூக்குரல் எழுப்பியபடி ஆங்காங்கே சுற்றித் திரியும். அதுபோல மகுடியின் சத்தத்திற்கு ஏற்ப நடனமாடும் பாம்புகளையும் காணலாம்.

யோகேஷ் பிரவீன் என்பவரிடம் இக்கோயில் பற்றி கேட்டதற்கு, 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த பாடுக் பைரவ் கோயிலாகும். பாடுக் பைரவ், லக்ஷ்ண்புர் எல்லைக்காவலன் என்றும் மக்களால் அழைக்கப்படுவார். இங்கு பிரார்த்தனை செய்தால் பல்வேறு பிரச்சினைகளும் அகலும். இங்குள்ள பாடுக் பைரவ் சிலை 1000 முதல் 1100 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்றும் பிரவீன் கூறினார்.

இந்த கோயிலின் அருகே கோமதி நதி ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் அருகே ஒரு மையானமும் உள்ளது. பல்ராம்புர் எஸ்டேட் மன்னரால் இந்த கோயில் கடைசியாக சீரமைக்கப்பட்டுள்ளது.

அலகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மிஷ்ரா என்பவரின் குடும்பத்தினர் கதக் நடனப் பயிற்சி துவக்குவதற்காக இங்கு வந்துள்ளனர். இந்த கோயிலுக்குப் பின்புறம் கல்கா-பிந்தாதின் கி தியோதி என்ற ஒரு மண்டபமும் உள்ளது.

webdunia photoWD
கதக் நடனக் கலைஞர்களால் நன்கு அறியப்பட்ட ஆன்மீகத் தலமாக இந்த கோயில் அமைந்துள்ளது. இங்கு வரும் நடனக் கலைஞர்கள் முத்து மணிகளை பக்தியுடன் அணிந்து கொள்கின்றனர்.

இந்த விழாவில் ஷாம்போ மஹாராஜ் எழுதிய கவிதை சுரதாக்கள் அனைவரையும் கவர்ந்தது. உஸ்தாத் மற்றும் அவரது சீடர்கள் காலில் சலங்கை கட்டி அவர்களது அரங்கேற்றத்தை செய்தனர். தமயந்தி தேவி என்பவரது நடனமும் மிக அருமையாக இருந்தது.

கல்கா-பிந்தாதின் தியோதி மையம் தற்போது பாழடைந்துள்ளது. முந்தைய ஆட்சியின்போது குரு பிர்ஜு மஹாராஜ் அதனை சீரமைக்க பல்வேறு முயற்சிகளை செய்தார்.

கோயிலின் நிர்வாகி ஷியாம் கிஷோர் கூறுகையில், பைரவர் இசையின் கடவுள் என்று நம்பப்படுகிறது. நாங்கள் தினமும் படுக் பைரவருக்கு மதுபானத்தை நிவேதனம் செய்கிறோம். இசை வித்வான்கள் கிஷன் மஹாராஜ், பிஸ்மில்லாஹ் கான், ஹரி பிரசாத் செளராசியா, ·பதி மஹாராஜ் ஆகியோரும் இங்கு வந்து தங்களது அரங்கேற்றங்களை செய்துள்ளனர்.