இஸ்கான் ஆலயத்தில் கிருஷ்ண பக்தியின் தேனை ருசிக்கும் பக்தர்கள்...
webdunia photo
WD
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா... என்ற கிருஷ்ணனை வணங்கும் பக்தி முழக்கம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. துளசி மாலையை அணிந்த கிருஷ்ண பக்தர்கள் பக்திப் பெருக்கில் பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் இருந்தனர்... இதுதான் இஸ்கான் ஆலயம் என்றழைக்கப்படும் சர்வதேச கிருஷ்ண பக்தி அமைப்பின் கோயிலாகும்.
சர்வதேச கிருஷ்ண உணர்வு சமூகத்தை உருவாக்கியவர் அபய்சார்னஅர்விந்த பக்திவேதாந்தா சுவாமி பிரபுபாதா 1896ல் கொல்கட்டா நகரில் ஒரு வைஷ்ணவ குடு்ம்பத்தில் பிறந்தவர்.
1922 ஆம் ஆண்டு கொல்கட்டாவில் தனது ஆன்மீகக் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமியை முதல் முறையாக சந்தித்தார்.
அபயின் ஆர்வத்தைக் கண்ட பக்திசிந்தாந்த சரஸ்வதி வேத ஞானத்தை கற்றுத் தருவதற்கு அதிலும் குறிப்பாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுரையை ஆங்கிலம் பேசும் உலகத்திற்கு பரப்புவதற்காக அர்ப்பணிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
webdunia photo
WD
1959 ஆம் ஆண்டு சந்நியாசம் பெற்ற அபய், வாழ்க்கையின் பற்றுதல்களைத் துறந்துவிட்டு, தான் மேற்கொண்ட ஆன்மீக நோக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். 1966 ஆம் ஆண்டு சர்வதேச கிருஷ்ண உணர்வு சமூகத்தை (இஸ்கான்) ஏற்படுத்தினார். இந்த அமைப்பு இன்று 10,000 கிருஷ்ண ஆலயங்களிலும், 2,50,000 பக்தர்கள் குழுவாகவும் விரிவடைந்துள்ளது.
பகவத் கீதையும், மற்ற புனித நூல்களும் கூறிய கிருஷ்ண பக்த உணர்வை சமூகத்திற்கு உபதேசித்து அதன் மூலம் பிளவற்ற ஏகதெய்வ இயக்கத்தை உருவாக்குவது இஸ்கானின் நோக்கமாகும்.
நியூயார்க்கில் உருவான அந்த பக்தி அலை உலகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் பரவுயுள்ளது. பல்வேறு நாடுகளில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா... என்கின்ற பக்தி கோஷம் நிறைந்துள்ளது. இந்த இடத்தில் ஏராளமான பக்தர்கள் அமைதியைப் பெறுகின்றனர். கீதை எனும் புனித நூலின் மூலம் அவர்கள் அமைதி வழியைக் காண்கின்றனர்.
இவர்கள் கடைபிடிக்கும் 4 முக்கிய விதிகள்
வெங்காயம், பூண்டு, மீன், முட்டை உள்ளிட்ட அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்த்தல்.
மதுபானங்கள், சூதாட்டம், தவறான பாதையில் உறவுகள் ஆகியவற்றை புறக்கணித்தல்.
ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் பகவத் கீதையையும், மற்ற புனித நூல்களையும் கற்றல்.
ஒவ்வொரு நாளும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற மந்திரத்தை குறிப்பிட்ட உரைகளுக்கு உச்சரித்தல்.
ஆகியனவாகும்.
webdunia photo
WD
புனிதப் பயணத் தொடரில் இந்த வாரம் உங்களுக்கு உஜ்ஜைன் நகரில் உள்ள இஸ்கான் ஆலயத்தை அறிமுகப்படுத்துகிறோம். இங்குதான் பகவான் கிருஷ்ணர் தனது கல்வியை கற்றுத் தேர்ந்தார். 2006 ஆம் ஆண்டு இந்த மாபெரும் கோயில் கட்டி முடிக்கப்பட்டது. இங்குள்ள ராதாகிருஷ்ணா திருவுருவச் சிலைகள் மிக அழகானவை. அதுமட்டுமின்றி, இக்கோயிலில் இஸ்கானை துவங்கிய பிரவுபாதாவின் சிலையும் உள்ளது.
இஸ்கான் கோயிலில் உள்ளது போல இங்கும் துளசித் தோட்டம் உள்ளது. கிருஷ்ணருக்கு ஒவ்வொரு நாளும் துளசி மாலையே சூட்டப்படுகிறது. இக்கோயிலிற்கென்று தனியாக தங்குவதற்கான தர்மசாலை உள்ளது. இஸ்கான் ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் 2 முதல் 3 நாட்கள் வரை தங்குவதற்கு உலகெங்கிலும் விருந்தினர் மாளிகைகளை வைத்துள்ளது இஸ்கான். இங்கு தங்குபவர்களுக்கு சைவ உணவு மட்டுமே வழங்கப்படுகிறது.
webdunia photo
WD
இஸ்கான் ஆலயங்கள் அனைத்திலும் ஒரே விதமான கட்டடக் கலையும், கட்டட உள்அமைப்பையும் கடைபிடிப்பது தனித்த சிறப்பாகும். உலகின் எந்த இஸ்கான் ஆலயத்திற்குச் சென்றாலும் அங்கெல்லாம் நீங்கள் வாஞ்சையுடன் வரவேற்கப்படுவீர்கள். கிருஷ்ண பக்தின் ஆனந்தத்தை உணர ஏராளமான பக்தர்கள் இத்திருக்கோயிலிற்கு வருகின்றனர்.