பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் வாழ்வும் வாக்கும்

Webdunia

புதன், 22 ஆகஸ்ட் 2007 (17:12 IST)
பிறப்பு :

திருவிராமேச்சுரம் எனும் இடத்தில் சிவநேயச் செல்வரான சாத்தப்ப பிள்ளை என்பவருக்கும், செங்கமலத்தம்மைக்கும் கி.பி. 1850 - 52-ம் ஆண்டில் தலைப் புதல்வனாக பிறந்தார் ஒரு வெள்ளிக்கிழமை அன்று சூரியோதயத்தில் அவதரித்தார் பாம்பன் சுவாமிகள். பெற்றோர் அவருக்கு அப்பாவு எனப் பெயரிட்டனர். தந்தி அலுவலகத்தில் பணிபுரிந்த சேஷகிரிராயர் என்பவர் இவருடைய முருகபக்தியைக் கண்டு குமரகுருதாசர் எனும் பெயர் சூட்டினர். இப்பெயரே நிலைத்து நிற்கலாயிற்று. இவருடைய சொந்த ஊர் பாம்பன் என்பதால் இவரை மக்கள் பாம்பன் சுவாமிகள் என அழைக்கலாயினர்.

கல்வி :

பாம்பனைச் சேர்ந்த தமிழாசிரியர் முனியாண்டியா பிள்ளையிடம் தமிழ் கற்றார். கிருத்தவப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்து கல்வி பயின்றார். முதல் வகுப்பை முடிக்கும் முன்பே பள்ளியை விட்டு விலகிய குமரகுருதாசர், கந்தசஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தார்.

முதல் பாடல் பாடியது :

ஒருமுறை அவர் தமக்குச் சொந்தமான தென்னந்தோப்பைப் பார்வையிடச் சென்றார். தந்தையார் அவருக்கு முன்னே தோப்புக்குள்ளே சென்றுள்ளதை அறிந்து வாயிலிலேயே நின்றுவிட்டார். கையிலிருந்த கந்த சஷ்டி கவசத்தைப் பிரித்துப் பார்த்தார். தேவராய சுவாமிகள் பாடியருளியது என்று இருந்தது. தானும் அவரைப் போலவே பாட வேண்டும் என முருகனை வேண்டினார். அன்று வெள்ளிக் கிழமை சூரியோதயம் ஆகும் நேரம். ஏடு வகிர்ந்து எழுத்தாணி கொண்டு எழுதத் தொடங்க நினைத்து, முருகப் பெருமானே உன்னையே பாடக் கடவேன், பதிக முடிவில் அருணகிரி நாதர் பெயர் வைத்தே முடிக்கக் கடவேன் என்று கூறினார். அப்போது அவரை அறியாமலேயே கங்கையைச் சடையில் பரித்து எனும் மங்கலத் தொடர் அவரின் உள்மனதில் இருந்து தோன்றலாயிற்று. அதைத் தொடர்ந்து பன்னிரு சீர்விருத்தம் பாடியருளினார். அன்று முதல் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் இயற்ற வேண்டும் என முடிவு செய்தார். அவ்வாறே பாடி ஒரு நோட்டில் சிவப்பு மையால் நூறு பாடல்கள் எழுதி வைத்தார்.

சேது மாதவையர் என்னும் அடியார் அப்பாடல்களைப் பார்த்து மிகவும் நன்றாக உள்ளன. புதுக்கோட்டைப் புலவர் குமாரசாமியிடம் காட்டி, அவர் நன்றாக உள்ளது என்று கூறினால் இந்தப் பாடல்களை வெளியிடலாம் என்று கூறி அவற்றை எடுத்துச் சென்றார். புலவர் பார்வையிட்டு நன்றாக உள்ளது, முதல் பாடலிலேயே துறவு தோன்றுகிறது என்று கூறவே, நூலை வெளியிடலாம் என்று சேதுமாதவையர் சுவாமிகளிடம் கூறினார்.

மந்திர உபதேசம் :

சேதுமாதவையர் இவரை இராமேச்சுரத்திற்கு விஜயதசமி முதல் நாள் வந்து தம் வீட்டில் தங்குமாறு கூறினார். இவரும் அவ்வாறே சென்று தங்கினார். விஜயதசமி வெள்ளிக்கிழமை அதிகாலை சூரியோதயத்திற்கு முன் அக்கினி தீர்த்தத்திற்கு இருவரும் சென்றனர். சூரியோதயத்தில் அக்கினி தீர்த்தத்தில் மூழ்கினர். உடம்பில் திருநீறு பூசினர். ஒரு தனியிடத்தில் சேதுமாதவையர் இவருக்குச் சடக்கர (சரவணபவ) மந்திரத்தை உபதேசம் செய்தார்.

திருமணம் :

துறவு நாட்டம் கொண்டிருந்த இவர், வினைப்பயனால் காளிமுத்தம்மை என்ற அம்மையாரை மணந்தார். இவருக்கு ஒரு பெண்ணும், இரு ஆண்களும் மகவாகப் பிறந்தனர்.

காஞ்சியில் தங்கி எல்லாக் கோவில்களையும் தரிசித்து விட்டுக் கையில் பணம் குறைவாக இருந்ததால் ஊருக்குப் புறப்படுவதற்காக தான் தங்கியிருந்த சத்திரத்தின் முற்றத்திற்கு வந்தார். அப்போது வெள்ளை முண்டாசு கட்டி, வெள்ளை உடை உடுத்திய 32 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து எந்த ஊர்? யாது காரியமாக வந்தீர்? குமரகோட்ட தரிசனம் ஆயிற்றா? எனக் கேட்டார். இவர் இல்லை என்றதும், இவரை அழைத்துச் சென்று குமர கோட்டத்தின் கொடிமரத்தைக் காட்டி இதுவே குமர கோட்டம் என்று சொல்லிவிட்டு அவர் மறைந்து விட்டார். இவர் குமர கோட்ட தரிசனம் செய்து புறப்பட்டார்.

பிரப்பன் வலசையில் தவம் :

1894-ம் ஆண்டு பிரப்பன் வலசை (இராமநாதபுரத்திற்கும் இராமேசுவரத்திற்கும் இடையில் உள்ள சிறிய கிராமம்) மயானத்தில் சதுரக்குழி அமைத்து முருகப் பெருமானை நினைத்து நிஷ்டை கூடினார். ஆறாவது நாள் மனம் அடங்கியது. ஏழாம் நாள் அகத்திய முனிவரும் அருணகிரி நாதரும் புடைசூழ பழநி ஆண்டவர் பிரப்பன் வலசைக்கு வந்து, சுவாமிகளின் திருமேனி முழுவதும் திருநீறு பூசினார். வலச் செவியில் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்தார். செய்த பின்பு மூவரும் மேற்றிசை நோக்கி நடந்து சென்று மறைந்தருளியதாக அறியப்படுகிறது. இதன்பின் தொடர்ந்து பாம்பன் சுவாமிகள் நிஷ்டையிலிருந்தார். மொத்தம் 35 நாட்களுக்குப் பின் ஆகாயத்தில் பேரொலி உண்டாயிற்று. ஏகாதச ருத்திரர்கள் இவரை எழுந்திரு என்று கட்டளையிட்டனர். என் தலைவன் முருகப்பெருமானின் கட்டளை என்றால் எழுந்திருப்பேன் என்றார் பாம்பன் சுவாமிகள். அவர் கட்டளை தான். நாங்கள் ஏகாதச ருத்திரர்கள் என்றனர். அதன் பின் எழுந்தவர், நிஷ்டை கூடிய குழியை மும்முறை வலம் வந்து வீழ்ந்து வணங்கி புறப்பட்டார்.

பால நூல்கள் இயற்றல் :

சென்னையில் இருக்கும் போதும், தல யாத்திரை செய்து சிதம்பரம் போன்ற தலங்களில் தங்கும் போதும் சுவாமிகள் சாத்திர - தோத்திரங்களாகப் பல நூல்களை இயற்றியருளினார். இல்லறத்திலிருக்கும் போதும், துறவு பூண்ட பின்பும் பாடியருளிய பாடல்களின் தொகை 6666. இவற்றை ஆறு மண்டலமாக வகுத்தார். எல்லாப் பாடல்களும் முருகனைப் பற்றியவையே.

ஜீவகாருண்யம் :

உயிர்கள் மீது கருணை காட்டவேண்டும். அதுவே பக்திக்கு அடிப்படை. கருணை இல்லாதவனுக்கு இறைவன் அருள் கிடைக்காது என்பதே குமரகுருதாசரின் போதனையாக இருந்தது.

ஜீவகாருண்யம் உண்டேல் பக்தி உண்டாகும். பக்தி உண்டேல் பாச வைராக்கியம் உண்டாகும். பாச வைராக்கியம் உண்டேல் ஞானம் உண்டாகும். ஞானத்தினால் முக்தி வாய்க்கும் என சுவாமிகள் போதித்துள்ளது நினைவு கூரத்தக்க உபதேசம்.

மயூரக் காட்சி :

1923-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை இவர் தம்புசெட்டித் தெரு வழியே தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நடந்தார். அப்போது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடி வந்த பெரிய குதிரை வண்டி சுவாமிகள் மீது மோதியது. சுவாமிகள் கீழே நிலத்தில் விழுந்தார். வண்டிச்சக்கரம் இடக் கணைக் காலில் ஏறி எலும்பை முறித்து விட்டது. அந்த வண்டியிலேயே அவரை அமர்த்தி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். உப்பு நீக்கி உண்பதாலும், முதிர்ந்த வயதாலும் முறிந்த எலும்பு பொருந்தாது. இருப்பினும் மருத்துவமனையில் இருங்கள் என்று தங்க வைத்தனர். சுவாமிகள் இத்துடன் உலக வாழ்வு முடிந்துவிடும்; முருகன் திருவடியை அடைந்து விடுவோம் என்று மகிழ்ந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்