7, 16, 25

Webdunia

வெள்ளி, 31 ஆகஸ்ட் 2007 (15:52 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் எதையும் அனுசரித்து போகக்கூடியவர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு இந்த மாதத்தில் தொட்ட காரியங்கள் துலங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும்.

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அவர்களின் போக்கில் மகிழ்ச்சி உண்டு. உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். முன் கோபம், டென்ஷன் விலகும். உடன் பிறந்தவர்களுடன் அனுசரித்து போவீர்கள்.

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு சுப காரியத்தடைகள் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் முடியும். பெற்றோரின் பாச மழையில் நனைவீர்கள். வீடு, மனை வாங்குவீர்கள். அரைகுறையாக நின்று போன கட்டிட பணிகளை இனி விரைந்து முடிப்பீர்கள்.

புண்ணிஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். உறவினர்கள், நண்பர்களால் நன்மை பிறக்கும். மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். வழக்குகளில் வெற்றி உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் நீங்கும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக அமையும்.

வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சாமாளிப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டுதொழிலில் வழக்கமான லாபம் உண்டு. வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும்.

உத்யோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சம்பளப் பிரச்சனை தீர்வுக்கு வரும். எதிலும் வெற்றி பெறும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்-2, 7, 11, 16, 20, 25, 29

அதிஷ்ட எண்கள் -2, 7

அதிஷ்ட நிறங்கள்- மஞ்சள், ஊத

அதிஷ்ட கிழமைகள்- வியாழன், சனி

வெப்துனியாவைப் படிக்கவும்