வைகாசி விசாகம்

செவ்வாய், 24 ஜூன் 2008 (12:29 IST)
வைகாசி மாதத்தில் பூரணச் சந்திரனும், விசாக நட்சத்திரமும் கூடி வரும் நாளைத் தான் வைகாசி விசாகம் என்று நாம் கொண்டாடுகிறோம்.

webdunia photoWD
வைணவ ஆழ்வார்களில் சிறந்தவரான நம்மாழ்வார் பிறந்ததும் இந்த விசாக நட்சத்திரத்தில்தான். புத்தர் பிறந்ததும், அவருக்கு போதி மரத்தடியில் ஞானம் கிடைத்ததும், அவர் இப்பூவுலகை விட்டுப் பிரிந்த நாளும் கூட இந்த விசாக நாள்தான்.

வைகாசி விசாக நாளன்று முருகனுக்கு பூஜைகள் செய்வதும், விரதமிருப்பதும், முருகன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதும் சிறந்தது.