மத்தேயு நற்செய்தி ‌விள‌க்க‌ம்

செவ்வாய், 8 ஜூலை 2008 (14:36 IST)
மத்தேயு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களின் முதலாவது நூலாகும். இந்நூல் மொத்தம் 28 அதிகாரங்களை கொண்டுள்ளது.

இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டின் முதலாவது நூலாகும். இது இயேசுவின் சீடரான மத்தேயுவின் பெயரைக் கொண்டுள்ளது.

மற்ற நற்செய்தி நூல்களான மாற்கு, லூக்கா என்பவற்றுடன் பொதுவான வசன எடுத்தாள்கையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது.

இந்நூலை பொதுவாக 4 பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். ஒவ்வொன்றும் இயேசுவின் வாழ்கையின் மு‌க்‌கிய‌ப் பகுதிகளைக் குறிக்கிறது.

இயேசுவின் வம்ச வரலாறு, பிறப்பு, குழந்தை பருவம் (அதிகாரம் 1-2)

யோவா‌‌ஸ‌்நான‌னின் பகிரங்க வாழ்வும் இயேசுவின் ஞானஸ்நானமும் (அதிகாரம் 3; 4:11)

கலிலேயாவில் இயேசுவின் பகிரங்க வாழ்க்கை (4:12-26:1)

மலைச் சொற்பொழிவு (அதிகாரம் 5-7)

மறைபரப்பு பணிக்கு சீடரை பணிக்கிறார் (10-11:1)

உவமைகள் (அதிகாரம் 13)

கிறிஸ்தவரிடயேயான தொடர்புகள் (அதி 18-19:1)

இரண்டாம் வருகை பற்றிய முன்னறிவித்தல் (அதிகாரம் 24-26:1)

இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, மறை பரப்பு பணிப்பு (28:16-20)

இந்நூலின் முதன்மை நோக்கம் நாசரேத்தூர் இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா என்பதை வலியுறுத்துவது ஆகும். மேலும் இந்நூல், இயேசு பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட தீர்க்க தரிசனங்களை நிறைவு செய்ய வந்தார் என்பதை உண‌ர்‌த்து‌கிறது. இதனை உறு‌தி‌ப்படு‌த்த குறை‌ந்தது 65 சூழல்களில் பழைய ஏற்பாட்டை மேற்கோள் காட்டுகிறது.

ம‌த்தேயு‌வி‌ன் அடிப்படை நோக்கத்தை பின்வரும் வசனம் நன்கு விளக்கு‌ம்.

இயேசு கூறு‌கிறா‌ர் : "நியாயப் பிரமாணத்தையானாலு‌ம் தீர்க்க தரிசனங்களையானாலு‌ம் அ‌ழி‌க்‌கிறத‌ற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள் அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்"(5:17)

ம‌த்தேயு‌‌வி‌‌ல் இயேசு‌வி‌ன் வா‌ழ்‌க்கை‌ப் ப‌ற்‌றி கூற‌ப்படு‌ம் அ‌திகார‌ங்க‌ள் ஒ‌வ்வொ‌ன்றையு‌ம் இ‌னி வரு‌ம் க‌ட்டுரைக‌ளி‌ல் காணலா‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்