செல்பேசியுடன் காட்சி தரு‌ம் கணேசர்!

கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் பயன்படுத்துவது போல கடவுளும் செல்பேசியைப் பயன்படுத்துகிறார் என்று கூறினால் உ‌ங்களா‌ல் நம்ப முடிகிறதா? நம்பாதவர்களுக்காகத்தான் இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதி.

உங்களை 1,200 ஆண்டுகள் பழமையான கணேசரில் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறோம். இந்த கோயிலில் இருக்கும் அனைத்து பூசாரிகளும் 24 மணி நேரமும் செல்பேசியில் பே‌சிக் கொண்டு இருக்கிறார்கள்.

webdunia photoWD
தற்போதைய அவசர யுகத்தில் மக்களுக்கு கோயில்களுக்குச் செல்வதெற்கெல்லாம் நேரமில்லை. ஆனால் அவர்களுக்கு எல்லாம் கவலையே இல்லை. இந்தூரில் உள்ள ஜூனா சிந்தாமன் கணேசரின் கோயிலில் பக்தர்களின் குறைகள் செல்பேசியிலேயே கேட்கப்பட்டு அதற்கான நிவர்த்திகளும் வழங்கப்படுகின்றன.

ஜூனா சிந்தாமன் கணேசரின் கோயில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

கோயி‌லி‌ன் பூசாரி நம்மிடம் பேசுகையில், கடந்த 22 ஆண்டுகளாக இந்த கோயிலில் பூசாரியாக இருப்பவர்களுக்கு, பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தங்களது கோரிக்கைகளைக் குறிப்பிட்டு கடிதம் எழுதி வந்தனர். மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறியதும் அதற்கு நன்றி கூறியும் கடிதம் எழுதி வந்தனர்.
webdunia photoWD


ஆனால் தற்போது கடிதம் இருந்த இடத்தை செல்பேசி ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. பக்தர்கள் எங்களது செல்பேசியைத் தொடர்பு கொண்டு அழைத்ததும், நாங்கள் செல்பேசியை எடுத்து கணேசரின் காதில் வைத்து விடுவோம்.

பக்தர்கள் கூறும் குறைகள், பிரச்சினைகள் அனைத்தையும் கணேசன் கோயிலில் இருந்தபடியே செல்பேசியில் கேட்டுக் கொள்வாரஎ‌ன்‌றா‌ர்.

ஜூனா சிந்தாமன் கணேசரின் கோயிலுக்கு வரும் பக்தர்களும், கோயிலில் அமர்ந்திருக்கும் கணேசன், செல்பேசியில் பக்தர்கள் கூறும் குறைகளைக் கேட்டறிகிறார் என்று நம்புகின்றனர். செல்பேசியில் சொன்னாலும் பக்தர்களின் ஆசைகளை கணேசர் நிறைவேற்றி வைக்கிறார் என்று நம்புகின்றனர்.

கணேசருக்கு இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் அழைப்புகள் வருகின்றன. தற்போதும் சில பக்தர்கள் தங்களது நீண்ட கோரிக்கைகளை கடிதங்களில் எழுதியும் அனுப்புகின்றனர். பக்தர்கள் அனைவரும் தாங்கள் அனுப்பும் கோரிக்கைகளை கணேசன் கவனிப்பார் என்று நம்பிக்கையுடன் செய்கின்றனர் என்றா‌ர் அ‌ங்கு வ‌ந்த ப‌க்த‌ர் மினிஷா வர்மா.

நேரில் சென்று அரசியல்வாதிகளிடமும், அமைச்சர்களிடமும் மனு கொடுத்து ஏதும் நடக்காத நாட்டில் இறைவனிடம் செல்பேசியில் கூறினால் அது நிறைவேறும் என்று மக்கள் நம்புவதில் ஆச்சரியமேதுமில்லை. பிரார்த்தனை என்பதே தங்கள் குறைகளை நீக்குமாறு இறைவனிடம் வேண்டுவதுதானே?

webdunia photoWD
பக்தர்கள் இவ்வாறு பல வழிகளில் கூறும் தங்களது பிரார்த்தனைகளை கணேசன் கேட்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா அல்லது இதெல்லாம் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விளம்பரம் என்று கருதுகிறீர்களா?

உங்களது கருத்து எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். அதனை அறிந்து கொள்ள நாங்கள் ஆர்வமுட‌ன் இருக்கிறோம்.