ஆவியின் பிடியிலிருந்து விடிவிக்கும் மரம்!

ஒரு குறிப்பிட்ட மரத்தில் ஏறுவதால் தங்களை ஆட்டிப்படைத்து வரும் ஆவியின் பிடியில் இருந்து பெண்கள் விடுபட முடியுமா? சேராக இருக்கும் தண்ணீரில் மூழ்கி எழுவதன் மூலம் பேய்களின் பிடியில் இருந்துதான் விடுபட முடியுமா?

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் காண, இதெல்லாம் நடக்கும் ஓரிடத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.

webdunia photoWD
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இஸ்லாமிய முனிவர் ஒருவரின் சமாதிக்கு அருகில் உள்ள மரம்தான் இப்படி ஆவியால் பிடிக்கப்பட்ட பெண்களை விடுவிக்கிறது!

இங்கு சேறுபோல் கிடக்கும் குளத்தில் மூழ்கி எழுந்து பாபாவின் சமாதியில் வணங்கிவிட்டு இந்த மரத்தில் ஏறி இறங்குவதன் மூலம் ஆவிகளின் பிடியில் இருந்து பெண்கள் விடுபடுவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

ஆவியால் பிடிக்கப்பட்ட பெண்கள் இந்த மரத்தில் ஏறும்போது அவர்கள் வினோதமான சத்தங்களைக் கொடுக்கின்றனர். இதெல்லாம் அவர்களை ஆவி பீடித்துள்ளதன் அறிகுறி என்று அம்மக்கள் கூறுகின்றனர்.

பொதுவாக பெண்கள் மரத்தில் ஏறுவது இயலாத காரியம். ஆனால் இங்கு சமாதியாகி இருக்கும் பாபாவின் சக்தியே அவர்கள் மரத்தின் மீது ஏற உதவுகிறது என்று இக்கிராமத்து மக்கள் கூறுகின்றனர்.

மரத்தில் ஏறி முடித்து வந்த பெண்களை அங்குள்ள பூசாரி (காஜி) அவர்களது முடியைப் பிடித்து இழுத்து ஒரு சுவற்றுக்குக் கொண்டு சென்று அங்கு ஒரு எலுமிச்சைப் பழத்தை வைத்து ஆணி அடித்துவிடுகிறார்.

webdunia photoWD
பிறகு ஆணி அடிக்கப்பட்டதுடன் சிக்கியுள்ள முடியை வெட்டிவிடுகிறார். இதன் மூலம் அந்தப் பெண்ணுக்கும், அவளைப் பீடித்திருந்த ஆவிக்கும் இருந்த தொடர்பு துண்டிக்கப்படுவதாகக் கூறுகின்றார்.

இந்த பழக்கம் நீண்ட நாட்களாக இங்கு நடைபெற்று வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

தனக்கு ஏற்பட்டுள்ள நோய் என்னவென்று மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தான் இந்த சமாதிக்கு வந்து குணம் பெற்றதாக சந்தோஷ் என்பவர் எங்களிடம் கூறினார்.

ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் பாபாவின் சமாதிக்கு அருகே திரள்கின்றனர். பாபாவின் அருள் ஆவிகளின் பிடியில் இருந்து தங்களை மீட்கும் என்று நம்பி வருகின்றனர்.

இப்படிப்பட்ட நடைமுறைகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். எங்களுக்குக் கூறுங்கள்.