பேயை தெய்வமாக வணங்கும் வழக்கத்தை உங்களால் ஏற்க முடியுமா? இந்த வார நம்பினால் நம்புங்களில் உங்களை அப்படிப்பட்ட வழிபாட்டை கடைபிடிக்கும் ஒரு கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறோம்.
webdunia photo
WD
மராட்டிய மாநிலம் அஹமத்நகருக்கு அருகில் உள்ளது நந்தூர் நிம்பாதைத்தியா என்ற கிராமம். இங்கு ஒரு கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் குடிகொண்டுள்ள பேய்தான் இந்த கிராமத்து மக்கள் வணங்கும் தெய்வம்.
இம்மக்களின் தெய்வ வழிபாட்டிலுள்ள மற்றொரு வினோத அம்சம் என்னவெனில், இவர்கள் யாரும் ஸ்ரீ இராம பக்த ஹனுமானை வழிபடுவதில்லை. ஹனுமானின் பெயரையும் யாருக்கும் வைப்பதில்லை, ஹனுமான் பெயர் கொண்ட எவராவது இக்கிராமத்திற்கு வர நேர்தால் அவர் முதலில் தனது பெயரை மாற்றிக்கொண்டுதான் ஊருக்குள் நுழைய முடியும்.
ஏன் தெரியுமா? இக்கோயிலின் பேய்க்கு புராணத்துடன் உள்ள தொடர்புதான் அதற்குக் காரணம். இராவணனால் கடத்தப்பட்ட தனது மனைவி சீதையைத் தேடிய இராமன், காந்தாரேஸ்வரத்திலுள்ள வால்மீகி முனிவரை சந்திக்கச் சென்றபோது இவ்விடத்தில் தங்கினாராம். அவருக்கு நிம்பாதைத்யா என்ற இந்தப் பேய் பக்தியுடன் சேவை புரிந்து இராமனின் ஆசிகளைப் பெற்றதாம்.
நிம்பாதைத்யாவின் சேவையால் மனம் குளிர்ந்த இராமன், இவ்விடத்திலேயே நீ எப்போதும் வாழ்ந்துக்கொண்டிருப்பாய் என்று ஆசிர்வதித்தவிட்டு இந்தக் கிராமத்து மக்கள் ஹனுமனுக்கு பதிலாக உன்னையே தங்கள் தெய்வமாக வழிபடுவார்கள் என்று கூறினாராம். அன்று முதல் இக்கிராமத்து மக்கள் நிம்பாதைத்தியாவையே தங்கள் தெய்வமாக வழிபட்டு வருவதாக இக்கிராமத்து வரலாறு கூறுகிறது.
webdunia photo
WD
இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெளியூர்களுக்குச் சென்று பணியாற்றினாலும் நிம்பாதைத்யா ஊர்வல விழாவிற்கு தவறாமல் வந்து கலந்து கொள்கின்றனர். ஹனுமானின் பெயர் கொண்ட நிறுவனம் ஒன்று தயாரிக்கும் வாகனத்தை இங்குள்ள மக்கள் வாங்குவதில்லை என்று கூறுகிறார் இக்கிராமத்தில் வாழ்ந்துவரும் ஏக்நாத் ஜனார்தன் பால்வே என்ற ஆசிரியர்.
ஹேமந்த்பன்தி எனும் கட்டடக் கலையில் கட்டப்பட்ட இக்கோயில் இரண்டு அடுக்குகளாக உள்ளது. இந்த ஊரிலுள்ள ஒரே இரண்டு அடுக்கு கட்டடம் இது மட்டும்தான்.
இக்கிராமத்து மக்கள் ஹனுமானை வணங்காத்து மட்டுமின்றி, அவரை அபச குணமாகவும் கருதுகின்றனர். நிம்பாதைத்யாவையே எல்லா வித்த்திலும் தங்கள் கடவுளாக கருதுகின்றனர்.
பேயை குலதெய்வமாக வணங்கும் இக்கிராமத்தைப் போல் வேறு ஒரு கிராமத்தை நீங்கள் கண்டதுண்டா? ஆம் என்றால் எங்களுக்கு எழுதுங்கள்.