இப்பகுதியில் உள்ள பாட்டால் பாணி என்ற நீர் வீழ்ச்சிக்கு அருகே செல்லும் இரயில் பாதையில ், டாண்டியா பீலுக்கும் பிரிட்டிஷ் படையினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. அதில் டாண்டியா பீல் கொல்லப்பட்டார். அவர் இறந்ததற்குப் பிறகு அந்த இரயில் பாதையில் பல விபத்துக்கள் ஏற்பட்டன. இதற்குக் காரணம் டாண்டியா பீல் இறந்ததே என்று கூறிய அப்பகுதி மக்கள ், அந்த இரயில் பாதைக்கு அருகிலேயே அவருக்கு கோயிலைக் கட்டினர். அந்தக் கோயில் கட்டப்பட்டதற்குப் பிறக ு, அந்த வழியாகச் செல்லும் இரயில்கள் அனைத்தும் அங்கு சிறிது நேரம் நின்று டாண்டியா பீலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்கின்றன. அப்படியேதுமில்லை என்று இரயில்வே நிர்வாகம் மறுக்கிறது.
பாட்டால் பாணியில் இருந்து காலாகுண்ட்டிற்குச் செல்லும் இரயில் பாதை இங்கு பிரிவதால ், சிறிது நேரம் இரயில்கள் நின்று பாதை மாற்றப்பட்ட பிறகு செல்வதாகவும ், இந்த இரயில் பாதை மேட்டுப் பகுதியில் செல்வதால் பிரேக் சோதனை செய்ய நிறுத்தப்படுவதாகவும ், அப்பொழுது இரயில் பயணிகள் தங்களது சிரத்தைத் தாழ்த்தி டாண்டியா பீலை வணங்குவதாகவும் அவர்கள் கூறினர். ஆனால ், அந்த வழியாகச் செல்லும் பயணிகளுக்குத் தெரியும் உண்மை என்னவென்ற ு. இங்கு நிறுத்தாமல் சென்ற இரயில்கள் விபத்திற்கு உள்ளானதாக அப்பகுதி மக்கள் சொல்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு விடயத்தைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள். எங்களுக்கு எழுதுங்கள்.
செயலியில் பார்க்க x