கரேடி வாலி மா நிகழ்த்திய அதிசயம்!

திங்கள், 4 பிப்ரவரி 2008 (19:08 IST)
webdunia photoWD
நம்பினால் நம்புங்கள் பகுதியில் இந்த வாரம் ஒரு அதிசயத்தை உங்கள் கண் முன் கொண்டு வந்துள்ளோம். கரேடி மா அம்மன் சிலையில் இருந்து திடீரென்று தண்ணீர் வரத் துவங்கியதே அந்த அதிசயத்திற்குக் காரணம்!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டம் கரேடி கிராமத்தில் அதிசயத்தை நிகழ்த்தும் இந்த தெய்வம் சிலை வடிவில் உள்ளது.

வாசனையுடன் அம்மனின் சிலையில் இருந்து வெளியேறும் அந்த நீர் புனிதமானது என்றும், எல்லா நோய்களையும் தீர்க்கவல்லது என்றும் அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.

webdunia photoWD
நாங்கள் அந்த கிராமத்திற்குச் சென்றதும் கோயிலிற்கு அருகில் ஒரு குளம் இருப்பதைக் கண்டோம். அங்கு கல்லால் ஆன ஒரு சிலை இருந்தது. அந்தச் சிலையில் தோளில் ஒரு ஓட்டை இருந்தது. அந்த ஓட்டையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் வந்ததாக கோயில் பூசாரி ஒருவர் தெரிவித்தார்.

முதலில் தாங்கள் அந்தத் தண்ணீரை முற்றுமாக எடுத்துவிட்ட பின்னரும் மீண்டும் அதில் நீர் நிரம்பியதாகக் கூறினார்.

அந்தக் கிராமத்தின் தலையாரியான இந்தர் சிங்கை சந்தித்தோம். அவர், இந்தச் சிலை மிகப் பழமையானது என்று கூறனார். எந்த அளவிற்கு பழமைவாய்ந்தது என்றால், அது மகாபாரதக் காலத்தைச் சேர்ந்தது என்றும் கூறினார்.

மகாபாரதத்தில் கர்ணன் வணங்கிய கர்ணாவதி இவர்தான் என்றும், கர்ணாவதி ஒவ்வொரு நாளும் அளித்த தங்கக் கொடையில்தான் ஏழைகளையும், தன்னை நாடி வந்தவர்களுக்கும் கர்ணன் வாரி வழங்கியதாகக் கூறினார்.

webdunia photoWD
அப்படி புகழ்பெற்ற அந்த தெய்வத்தின் சிலையில் இருந்து நீர் வடிந்ததைக் கேள்விப்பட்ட மக்கள் பெரும் திரளாகக் கோயிலில் கூடினர். அந்த தண்ணீரைக் குடிப்பதன் மூலம் தங்களைப் பீடித்துள்ள வியாதியில் இருந்தும், வாழ்க்கையின் பிரச்சனைகளில் இருந்தும் விடுபட முடியும் என்றும் நம்பினர்.

உஜ்ஜைன் நகரை ஆண்ட விக்ரமாதித்தன், கர்ணாவதியை ஒவ்வொரு நாளும் வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. நாங்கள் சிறிது நேரம் அங்கிருந்தோம். அம்மனின் சிலையை வழிபட்டவர்களுக்கு அந்தப் பூசாரி புனித நீரை வழங்கினார். அவர் எடுக்க எடுக்க தண்ணீர் வற்றாமல் நிரம்பிக் கொண்டே இருந்தது.

அங்கு வந்த பக்தர்களில் ஒருவரான பண்டிட் சுரேந்திர மேத்தா என்பவர், இச்சிலையும், கோயிலும் சுயம்புவாகத் தோன்றியது என்று கூறினார். தனது பக்தர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க நினைத்த கரேடி மா, இப்படி புனித நீரை அளிப்பதாக சில பக்தர்கள் கூறினர்.

அந்தச் சிலை பூமியில் மிக அழமாக பதிக்கப்பட்டுள்ளதால், பூமிக்குள் ஏற்படும் புவியியல் மாற்றங்கள் காரணமாக இப்படி நிகழலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், எங்களுக்கு எழுதுங்கள்.