இந்த வாரம் நம்பினால் நம்புங்கள் பகுதியில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சிவலிங்கங்களின் நிறம் மாறியதை உங்களுக்கு கொண்டு வருகிறோம்.
வாரணாசியில் உள்ள சிவலாயங்களில் இருந்த சிவலிங்கங்கள் நிறம் மாறுவதாக சில செய்திகள் கூறின. அங்கு மட்டுமல்ல, இங்கும்தான் என்பதுபோல, லக்னோ நகரில் உள்ள சிவாலயங்களில் இருக்கும் சிவலிங்கங்களின் நிறமும் மாறியது. சில ஆண்டுகளுக்கு முன்பு கணேசர் சிலை பால் குடிக்கின்றது என்று கூறப்பட்டதைப் போன்றே, ஒரே நாளில் இந்த சிவலிங்கங்களும் நிறம் மாறியதாக கூறப்படுகிறது.
லக்னோவில் உள்ள சரோதம் கோயிலில் இருந்த சிவலிங்கத்தின் நிறம் மாறிவிட்டது என்ற தகவல் வெளியானதும் ஏராளமான பக்தர்கள் அங்கு கூடினர். மதியம் 12 மணிக்கு அதுவரை கறுப்பாக இருந்த சிவலிங்கம், வெள்ளை நிறத்திற்கு மாற ஆரம்பித்ததாம். இது பக்தர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அந்த நகரில் உள்ள குந்தன்லால் நகைக் கடையின் உரியமையாளரும், சரோதம் கோயிலின் அறங்காவலருமான அதிபர் அத்துல் அகர்வால், தான் அந்த அதிசயத்தைக் கண்டதாகக் கூறினார்.
webdunia photo
WD
சரோதம் சித்தா பீட கோயிலின் பூசாரியான சியாராம் அவஸ்தியும் இதனை அதிசயம் என்கின்றார். இக்கோயில் அமைந்துள்ள லக்னோ நகரின் பழைய பகுதி, சோட்டா காசி என்றழைக்கப்படுகிறது. அங்கு சரோதம் கோயிலும், பாதி கலீஜியும் முக்கியத் திருத்தலங்களாகும். சரோதம் கோயிலில் ராமேஸ்வரம், பத்ரிநாத், கேதார்நாத், துவாரகா, ஜெகந்நாத் ஆகிய கோயில்களின் கடவுள்களை வணங்கலாம். இங்கு சொர்க்கமும், நரகமும் கூட உள்ளது. இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தொல்லியல் துறை பதிவு செய்துள்ளதாகவும் சியாராம் அவஸ்தி கூறினார்.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோயிலைப் போன்றே சரோதம் கோயிலும் இருக்கிறது. இக்கோயிலில் சிவலிங்கத்திற்கு அருகில் ராமர் பாலத்தின் மாதிரி வைக்கப்பட்டுள்ளது. அங்கு ராவணின் அரசவையும் அங்கு உள்ளது. இந்தக் கோயிலின் லிங்கம் நிறம் மாறியதைப் போல, ராமேஸ்வரததில் உள்ள கோயிலில் உள்ள லிங்கமும் நிறம் மாறியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இப்படியெல்லாம் ஏற்படுவதற்குக் காரணம், ராமர் சேது குறித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கூறிய கருத்தும், உச்ச நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தாக்கல் செய்த தவறான அறிக்கையும்தான் என்று சியாராம் அவஸ்தி கூறுகிறார்.
ராமர் பாலத்திற்கு ஏற்பட்ட ஆபத்துதான் சிவலிங்கம் நிறம் மாறக் காரணம் என்று அரவிந்த் சுக்லா கூறுகிறார்.
webdunia photo
WD
லக்னோவில் உள்ள ராணி கூட்ரா என்ற பகுதியில் உள்ள சந்தோஷி மாதா கோயிலில் இருந்த சிவலிங்கமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறம் மாறியதைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். வெள்ளை நிறத்தில் இருந்த சிவலிங்கத்தின் மீது சிவப்பு பட்டைகள் தோன்ற ஆரம்பித்தன. லிங்கம் மட்டுமல்ல, நந்தியும் நிறம் மாறியது.
சிவலிங்கத்தில் இருந்த சிவனின் கண்கள் மேலும் பளிச்சிட்டது. இத்திருக்கோயிலில் கடந்த 20 ஆண்டுகளாக பூசாரியாக இருந்துவரும் சந்திரசேகர் திவாரி, இதற்குமுன் இப்படி ஏற்பட்டதில்லை என்று கூறினார். தனது வல்லமையை நிரூபிக்க இறைவன் இப்படிப்பட்ட அதிசயங்களை நிகழ்த்துகிறார் என்றும், தனது வல்லமையின் மீது நம்பிக்கை வைக்காத மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிசயங்களின் மூலம் இயற்கையைத் தாண்டிய தனது சக்தியை இறைவன் நிரூபிக்கிறார் என்றும் கூறிய சந்திரசேகர் திவாரி, எல்லாமே நமது நம்பிக்கையின் அடிப்படையில்தான் உள்ளன என்று கூறினார்.
webdunia photo
WD
தற்பொழுது சிவலிங்கத்தின் நிறம் பழைய நிறத்திற்கு மாறிவிட்டது. சிவலிங்கத்தின் மீது சிவப்புக் கோடுகள் தற்பொழுது கறுப்புப் புள்ளிகளாக மாறிவிட்டன. ராணி கட்ராசெளக் எனும் பகுதியில் வசித்து வரும் மதுபாலா. யோகிதா சிங், வந்தனா பாண்டே, பிரிஜேஷ் பாண்டே, அஜித்குமார் சர்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரும், இது இறைவன் நிகழ்த்திய அதிசயமே என்று கூறினார்.
சார்பாக், சரோஜினி நகரில் உள்ள கெளரிகாவ் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களிலும் இப்படி நடந்துள்ளது. பலர் இதனை அதிசயம் என்றே கூறுகின்றனர்.
இப்படிப்பட்ட மாற்றங்களுக்கு ஏதாவது விஞ்ஞானப்பூர்வ காரணங்கள் இருக்கும் என்று தொல்லியல் துறையின் துணை இயக்குநராக உள்ள பி.கே. சிங் கூறுகிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகளில் கூட எந்த மாற்றமும் ஏற்பட்டு தான் பார்த்ததில்லை என்று கூறுகிறார்.
இது குறித்து ஐ.ஆர்.டி.சி. முன்னாள் இயக்குநரும், உயிரி தொழில்நுட்ப பூங்காவின் தலைமை அலுவலருமான டாக்டர் பி.கே. சேத்திடம் பேச முயற்சித்தோம். ஆனால், அவர் எங்களைச் சந்திக்க மறுத்துவிட்டார்.