ஜோதிட ரீதியாக போகஸ்தானமும் லெஸ்பியனும்!

வியாழன், 20 நவம்பர் 2008 (18:04 IST)
கடந்த வாரம் ஒரு பிரபலமான வழக்கறிஞர் தனது மகனிற்கு பார்த்துள்ள பெண்ணின் ஜாதகத்தைக் கொண்டு வந்து காண்பித்தார். நான் (வழக்கறிஞர்) ஏற்கனவே பொருத்தம் பார்த்து விட்டாலும், நண்பர் என்ற முறையில் உங்களிடம் காண்பித்து கருத்துக் கேட்கலாம் என வந்தேன் என்றார்.

அப்பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்ததில் போகஸ்தானம் மிகவும் பாழ்பட்டுக் கிடக்கிறது. திருமண வாழ்க்கைக்கு, குறிப்பாக தாம்பத்தியத்திற்கு ஒத்துவருமா என்பது சந்தேகம். லெஸ்பியன் தொடர்பும் இருக்கலாம் என்பதால் உங்கள் பையனுக்கு வேறு பெண்ணைப் பாருங்கள் அல்லது இதே பெண்ணைத்தான் மணமுடிக்க வேண்டுமென்றால் பெண்ணின் குணத்தைப் பற்றி விசாரியுங்கள் என்றேன்.

திருமணத் தேதியை குறித்து அழைப்பிதழ் கொடுத்த பிறகு எப்படி திருமணத்தை நிறுத்துவது. அப்படியே நிறுத்தினால் எனது கௌரவம் என்னவாகும் என கோபம் கொப்பளிக்கப் பேசிய அவர், நீங்கள் சொல்வதால் விசாரிக்கிறேன் என்று கூறி விட்டுச் சென்றார்.

எனது வேண்டுகோளின் பேரில் சென்னை அண்ணா சாலையில் உள்ள துப்பறியும் முகமைக்குச் சென்ற அவர், மணப்பெண்ணின் போட்டோவைக் கொடுத்து விசாரிக்கச் சொன்னார். துப்பறிவாளரும் அப்பெண் படித்த கல்லூரியில் விசாரித்த போது, மணப்பெண் முதலாம் ஆண்டு படித்த போது அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.

அப்பெண்ணின் சக மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் இருவரும் எப்போது ஒன்றாகவே ஊர் சுற்றுவார்கள் என்றும், கல்லூரிகளில் சுற்றுலா அழைத்துச் சென்றால் அவர்கள் இருவரும் ஒரே அறையில்தான் தங்குவர் என்பதும் வெட்ட வெளிச்சமானது.

இதையறிந்ததும் அந்த வழக்கறிஞர் என்னிடம் மீண்டும் வந்து, “இப்படிக் கூட நடக்குமா... இதுவரை இதுபோன்ற சம்பவங்களை நாளிதழில் மட்டும்தான் படித்துள்ளேன்... என்ன செய்யலாம” என்றார். திருமணத்தை நிறுத்திவிடுங்கள் என்று கூறினேன். அவரும் அப்படியே மகனின் திருமணத்தை மனவருத்தத்துடன் நிறுத்தினார்.

ஜாதி, சொந்தம், அந்தஸ்து பார்த்து நடத்தப்படும் திருமணங்களிலும் இதுபோல் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் ஜாதிகளில் பல்வேறு பிரிவுகள் இருக்கும். அதில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பெண்ணைத் தேடி அலைவதை விட, வேறு ஜாதி, அந்தஸ்து குறைவாக இருந்தாலும், இருவரின் ஜாதகப் பொருத்தமும் சிறப்பாக இருக்கிறதா, போகஸ்தானம் நன்றாக உள்ளதா, அடுத்தடுத்து வரும் தசா புக்தி காலங்கள் பொருத்தமாக இருக்குமா என்று பார்த்து திருமணம் செய்தால் அத்தம்பதியர் மனமொத்து வாழ்க்கை நடத்துவர். முரண்பாடான உறவுகள், கணவன் கையால் கொல்லப்படுவது போன்ற சம்பவங்களும் குறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்