இந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு.
சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோத்திரம். சனியை இரண்டு பக்கத்திலும் வைக்கலாம்.
செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன்றும் சைவக் கிரகங்கள், சைவக் கடவுள்கள் ஆகும். செவ்வாய் - முருகன், குரு - தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள்.
இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம் அணிந்தால் பிரம்மாண்டமாக முன்னுக்கு வருவார்கள்.
webdunia photo
WD
அதிலேயும் ருத்ராட்சத்திலும் ஒன்று முதல் பல முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ஆனால் எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்கக் கூடிய ருத்ராட்சங்களே. அதில் எந்த மாறுபாடும் இல்லை.
ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றபடி அதில் மருத்துவ குணங்களும், ஆன்மீக குணங்களும் உள்ளன. பல்வேறு நூல்கள் இதைப் பற்றிக் கூறுகின்றன.
ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது.
webdunia photo
WD
அதற்காகத்தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.
ஏழரை சனி, அஷ்டமத்து சனி எல்லாம் வந்தாலே பலர் தானே ருத்ராட்சத்தை விரும்பி அணிவதைப் பார்த்திருக்கிறேன். ஏழரை சனி, அஷ்டமத்து சனி வந்தால் பழமையானவற்றை விரும்புவார்கள். ருத்ராட்சம், யானை தந்தம், யானை முடி மோதிரம் போன்றவற்றை அணிவார்கள்.
மற்றவர்களிடம் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக அல்லது அந்தப் பொருளின் மீதுள்ள ஒரு நம்பிக்கையினால் அவ்வாறு செய்வார்கள்.
webdunia photo
WD
சனி தசை நடக்கும்போது தன்னம்பிக்கையை விட மற்ற பொருட்களின் மீதுதான் நம்பிக்கை அதிகமாக இருக்கும். அதை அணிந்து கொண்டால் அதனால் நமக்கு நன்மை அளிக்கும் என்றெல்லாம் நினைப்பார்கள்.