நட்சத்திரத்தைப் பொறுத்து பொதுவாக பலன் கூறுவது? உதாரணத்திற்கு, பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இப்படி ஆவார்கள் என்று உறுதியாகக் கூற முடியுமா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு ஒலியும் அதிகம்
நட்சத்திரங்களுக்கு துணை நட்சத்திரங்கள் உண்டு. அதை வைத்துத்தான் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அதாவது ரோகிணி நட்சத்திரத்திற்கும், சுவாதி நட்சத்திரத்திற்கும் அதிகமான துணை நட்சத்திரங்கள் உண்டு. அதன்படி பார்த்தால் இந்த நட்சத்திரக்காரர்கள் சிறப்பாக வருவார்கள். நிறைய பிரச்சினைகள் இருக்கும். அதையும் தாண்டி அவர்கள் வெற்றி காண்பார்கள்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு பழமொழி சொல்வார்கள். சிலருக்கு எல்லாம் அந்த பழமொழி நூறு சதவீதம் நடப்பதை எல்லாம் பார்த்துள்ளோம்.
அஸ்வினி என்றால் கொஞ்சம் ஆதிக்கக் குணம் இருக்கும். எதிலும் புதுமையை விரும்புவார்கள். ஆன்மீகத்தில் இருந்து நாத்திகராகி, மீண்டும் நல்ல தசாபுக்தி வரும்போது மீண்டும் ஆன்மீகத்திற்கு மாறுபவர்கள் எல்லாம் உண்டு.
தசா புக்திகளைப் பொறுத்து குணாதிசயங்கள் கூடும் அல்லது குறையும். தசா புக்தியிலேயே 4 பாதங்கள் உண்டு. ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களுக்கும் குணாதிசயங்கள் மாறுபடும்.
நாழிகை தான் கணக்கு. அதாவது ஒரு நட்சத்திரம் என்றால் 60 நாழிகை. அதை நான்காகப் பிரித்தால் 15 நிமிடங்கள், ஒரு நட்சத்திரத்தின் முதல் 15 நிமிடம் முதல் பாதம், அடுத்த 15 நிமிடம் இரண்டாம் பாதம். அதுபோல பிரித்துக் கொள்வார்கள்.
கேட்டை என்றால் கோட்டை கட்டி ஆள்வார்கள். சில கேட்டை கோட்டையை இடிப்பார்கள். பின்னர் தான் கட்டுவார்கள். ஆண் மூலம் அரசாளும் என்பது தவறு. ஆனி மூலம் அரசாளும் என்பதுதான் சரி.
நட்சத்திரம் என்றால் 27 நட்சத்திரமும் நல்ல நட்சத்திரங்கள்தான். ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு. புனர்பூசம் என்றால் ஸ்ரீராமன் மாதிரி எல்லா புனர்பூசத்தில் பிறந்தவர்களையும் சொல்லிவிட முடியாது.
பூச நட்சத்திரம் வள்ளலார் நட்சத்திரம். பூசத்தில் பிறந்து கெட்ட காரியங்களில் ஈடுபடுபவர்களைப் பார்க்கிறோம்.
என்னதான் நல்ல நட்சத்திரத்தில் பிறந்தாலும் கெட்ட கிரகங்களின் தசா புக்திகள் நடக்கும்போது நல்ல குணத்தில் இருந்து மாறி கெட்ட நடவடிக்கைகள் இருக்கும்.
எனவே நட்சத்திரத்தை வைத்து ஒருவர் இப்படி இருப்பார் என்று முடிவுக்கு வந்து விட முடியாது. அவரது கிரக அமைப்புகளையும் பார்க்க வேண்டும்.
நாழிகை தான் கணக்கு. அதாவது ஒரு நட்சத்திரம் என்றால் 60 நாழிகை. அதை நான்காகப் பிரித்தால் 15 15 நிமிடங்கள், ஒரு நட்சத்திரத்தின் முதல் 15 நிமிடம் முதல் பாதம், அடுத்த 15 நிமிடம் இரண்டாம் பாதம். அதுபோல பிரித்துக் கொள்வார்கள்.
கேட்டை என்றால் கோட்டை கட்டி ஆள்வார்கள். சில கேட்டை கோட்டையை இடிப்பார்கள். பின்னர் தான் கட்டுவார்கள்.
ஆண் மூலம் அரசாலும் என்பது தவறு. ஆனி மூலம் அரசாலும் என்பதுதான் சரி.
நட்சத்திரம் என்றால் 27 நட்சத்திரமும் நல்ல நட்சத்திரங்கள்தான். ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு. புனர்பூசம் என்றால் ஸ்ரீராகவன் மாதிரி எல்லா புனர்பூசத்தில் பிறந்தவர்களையும் சொல்லிவிட முடியாது.
பூச நட்சத்திரம் வள்ளலார் நட்சத்திரம். அப்போ பூசத்தில் பிறந்து கெட்ட காரியங்களில் ஈடுபடுபவர்களைப் பார்க்கிறோம்.
என்னதான் நல்ல நட்சத்திரத்தில் பிறந்தாலும் கெட்ட கிரகங்களின் தசா புக்திகள் நடக்கும்போது நல்ல குணத்தில் இருந்து மாறி கெட்ட நடவடிக்கைகள் இருக்கும்.
எனவே நட்சத்திரத்தை வைத்து ஒருவர் இப்படி இருப்பார் என்று முடிவுக்கு வந்து விட முடியாது. அவரது கிரக அமைப்புகளையும் பார்க்க வேண்டும்.