ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரு‌க்கு ஒரே நேரத்தில் திருமணங்கள் செய்யக் கூடாது என்று கூறப்படுவது பற்றி?

செவ்வாய், 22 ஜனவரி 2008 (15:19 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்

தவிர்ப்பது நல்லது. 8 - 9 மணிக்குள் வெள்ளிக்கிழமை காலை சிம்ம லக்னத்தில் திருமணம் நடைபெறும் என்று பத்திரிக்கை அடிக்கிறோம்.

5 மணித்துளி, 10 மணித்துளி இடைவெளி அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள்தான் இருக்கும். அதற்கு ஒரே ஓரைதான் இருக்கும். ஒரு சுபக்காரியத்தை நிகழ்த்தும்போது அந்த ஓரை சுபமாக இருக்கிறது. அதற்குள் மற்றொரு சுபகாரியம் செய்யும் போது அந்த ஓரை சுபத்தன்மை அடைந்திருக்காது.

ஒரு நேரத்தில் ஒரு ஜாதகத்தைத்தான் பார்க்க முடியும். ஒரே லக்னம் நடைமுறையில் இருக்கும்போது ஒரு சுபக்காரியம் நடத்தும்போது ஒருத்தருக்குத்தான் அது சுபத்தன்மை அளிக்கும்.

மற்றொருவருக்கு சுபத்தன்மை அளிக்காது. ஒருவருக்கு குழந்தை இருக்கும். ஒருவருக்கு குழந்தை பிறக்காது அதுபோல் அமையும்.

ஒரு லக்னத்தில் ஒரு வேலை எடுத்தால் அந்த வேலையைத்தான் செய்ய வேண்டும். ஒரு வேலையைத்தான் செய்ய வேண்டும். மற்றொன்று செய்யக்கூடாது. ஒன்றுக்குத்தான் சுபமாக இருக்கும்.

அதனா‌ல் ஒரு நேர‌த்‌தி‌ல் ஒரு சுப‌க்கா‌ரிய‌ம் ம‌ட்டுமே செ‌ய்வது உ‌த்தம‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்