சகுனம் என்றால் என்ன? சகுனம் பார்ப்பது அறிவுப்பூர்வமானதா?

வியாழன், 13 டிசம்பர் 2007 (13:26 IST)
சகுனம் என்றால் என்ன? சகுனம் பார்ப்பது அறிவுப்பூர்வமானதா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்

இது பஞ்ச பூதங்களின் அடிப்படையிலான விடயம். 5 அறிவு வரை உள்ள ஜீவன்கள், தாவரங்கள் போன்ற இயற்கையின் அங்கங்களாய் திகழும் ஜீவன்களின் அசைவை வைத்து நல்லது கெட்டதை அனுமானிப்பதே சகுனம் பார்ப்பது என்பது.

"சகுனம் என்பது இயற்கையின் அசைவு அல்லது நல்லதற்கான இசைவு என்பதே!"

நமது நாட்டில் பல்வேறு சகுனங்களைப் பார்க்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. உதாரணத்திற்கு பூனை குறுக்கே வருவது.

பூனை : வலமிருந்து இடம் போனால் நல்லது.
இடமிருந்து வலம் போனால் கெடுதி என்பர்.

"தும்பலில் கிளம்பினாலும் தூரலில் போகாதே!" அது ஒரு கெட்ட சகுனமாக சொல்லப்படுகிறது.

இந்த திசையில் இடி இடித்தால் கிளம்பக் கூடாது என்பார். ஈசானத்தில் (வட கிழக்கு) இடி இடித்தாலோ அதே போல தென்மேற்கு திசையில் இடி, மின்னல் ஏற்பட்டாலோ கடும் மழைக்கு அறிகுறி மட்டுமின்றி, புறப்பட்டவர் சென்று சேரவேண்டிய இடத்தை சேர முடியாத நிலையோ அல்லது விபத்தோ நேரிடலாம் என்றோ சகுனம் கொள்ளப்படுகிறது.

சகுனம் என்பது இயற்கையின் மொழி ! ஒரு வழிகாட்டலாக இயற்கை எவ்வாறு பேசுகிறது, தாவரங்கள், விலங்குகள் எவ்வாறு பேசுகின்றன என்பதைக் கொண்டு எதிர்வரும் பலன் அறிவது.

6 அறிவு படைத்த மனிதன் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோமே. ஆனால் இயற்கையின் அனைத்து ரகசியங்களையும் அறிந்து கொள்ள முடிகிறதா? அந்த இயற்கை ரகசியங்களை வெளிப்படுத்துவதே சகுனம் பார்ப்பதற்கு அடிப்படையான இந்த நிகழ்வுகள் ஆகும். பூனை, இடி, மழை போன்றவையெல்லாம் அதற்கான காரணிகளே.

இது மிகப்பெரிய விடயம். குறிப்பிட்ட நேரத்தில் மேலும் நிறைய தெரிவிக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்