பரல்கள் என்பது கணித ஜோதிடத்தில் வரக்கூடியது. "ஜோதிட அலங்காரம்" என்ற நூலில் அதுபற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது என்று கூறிய ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன், அதுகுறித்து நீண்ட விளக்கமளித்தார்.
பரல் தொடக் நிலை, ஒரு கிரகத்தினுடைய வலிமையை குறிக்கக் கூடியது. அந்த வலிமை நீடித்ததா? அல்லது நிலையான வலிமையா? என்பதற்கேற்றவாறு எண்ணிக்கைகள் தரப்படுகிறது.
1. பரல் எண்ணிக்கை...
இது கணிதத்தில் கூறுவார்களே... கான்ஸ்டன்ட் என்று அப்படி ஒவவொரு கிரகமும் அது இருக்கும் வீட்டைப் பொறுத்து இத்தனைப் பரல்கள் என்பது நிர்ணயிக்கப்பட்டதாகும்.
2. ஏகாதிபத்திய சோதனை
இதனை என்னவென்று விளக்க ஒரு பாடல் உள்ளது.... இதனை ஒரு பார்முலா என்று கூறலாம்.
3. திரிகோண சோதனை...
4 அஷ்ட வர்க்கப்பரல்கள்
5 சர்வாங்க அஷ்டவர்கப் பரல்கள்
சர்வாங்க அஷ்டவர்கம் பார்த்தபின்பு ஒவ்வொரு ராசியும் எத்தனைப் பரல்கள் பெறுகிறது என்பதைக் கண்ணுற வேண்டும். (உதாரணம்) மேஷ லக்னம் 38 பரல் பெறுகிறது என்றால், அந்த வீட்டிற்குரிய கிரகம் மற்றும் கோச்சாரத்தில் (அன்றைய கிரக நிலை) வரக்கூடிய கிரகங்கள் மேஷத்தில் நிற்கும் போது அதிக நற்பலன்களைத் தரும்.
மகர லக்னத்தில் ஒருவர் பிறக்கின்றார் என்றால் லக்னாதிபதி வலுவிழந்து காணப்பட்டாலும் லக்னத்திற்கு அதிக பரல் கிடைத்தால் அவர் மிகுந்த ஆரோக்கியசாலியாகவும், தோற்றப் பொலிவு உள்ளவராகவும் இருப்பார்.
லக்னத்துப் பரல்களை விட 6-ஆம் வீடு அதிகப் பரல்களைப் பெறுமாயின் அவர் தன் வாழ்நாள் முழுவதும் நோயாளியாகவும், வழக்குகளை சந்திப்பவராகவும் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகுபவராகவும் இருப்பார்.
ராசிக்குண்டலி, நவாம்சம், தசாம்சம் உள்ளிட்ட பல கணக்கீடுகளையும் தாண்டி அஷ்ட வர்க்கப் பரல்களின் எண்ணிக்கை சர்வாங்க அஷ்டவர்க பரல்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் மூலம் மிகத் துல்லியமாக ஒருவரின் வருங்காலத்தையும், நிகழ்காலத்தையும் கணிக்கலாம்.