2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : மிதுனம்!

செவ்வாய், 31 டிசம்பர் 2013 (16:14 IST)
FILE
எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் ஆழமாக யோசித்து முடிவெடுக்கும் நீங்கள், கடந்து வந்த பாதையை ஒரு போதும் மறவாதவர்கள். உங்கள் ராசிநாதன் புதன் 7-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் புதிய யோசனைகள் பிறக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

புது வாகனம் வாங்குவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் சேரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அழகு, இளமைக் கூடும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நீண்ட நெடுநாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் முடியும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். மஞ்சள் காமாலை, தலைச்சுற்றல், காய்ச்சல், அலர்ஜி வந்து நீங்கும். தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள். குடும்பத்தில் சச்சரவு வந்து விலகும். வாழ்க்கையின் மீது வெறுப்புணர்வு வந்துச் செல்லும். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு குரு விலகி 2-ம் வீட்டில் தொடர்வதால் பணவரவு உண்டு. பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவீர்கள். கூடாப்பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளை பாக்யம் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். புது வீடு கட்டிக் குடிப்புகுவீர்கள்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.

21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-லும் அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். வீண் பழி வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை, கால் வலி வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்துச் செல்லும். வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறாதீர்கள். சின்ன சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும்.

இந்தாண்டு முழுக்க சனி 5-ல் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகும். அவர்கள் போக்கிலேயே அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னையில் கொஞ்சம் தள்ளியிருங்கள். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். 18.12.2014 முதல் 6-ம் வீட்டில் அமர்வதால் எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.

வியாபாரிகளே! பற்று வரவு கணிசமாக உயரும். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருக்க வேண்டாம். புது வாடிக்கையாளர்களும் வருவார்கள். கமிஷன், பதிப்பகம், வாகன உதிரி பாகங்களால் லாபம் கூடும். நன்கு அறிமுகமானவரை பங்குதாரர்களாக சேர்க்கப் பாருங்கள்.

உத்தியோகஸ்தர்களே! ஜீன் 21-ந் தேதி முதல் கேது 10-ல் அமர்வதால் சின்ன சின்ன அலைகழிப்புகள் இருக்கும். மேலதிகாரியின் குறை, நிறைகளையெல்லாம் சுட்டிக் காட்ட வேண்டாம். சக ஊழியர்களிடம் கவனமாக பழகுங்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

கன்னிப்பெண்களே! உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். வேற்றுமொழிப் பேசுபவர்கள் நண்பர்களாவார்கள்.

மாணவர்களே! உங்களின் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களை கேளுங்கள். அதிகாலையில் எழுந்து படியுங்கள்.

கலைத்துறையினர்களே! சின்ன சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

இந்த 2014-ம் ஆண்டின் முற்பகுதி நிம்மதியற்ற போக்கை தந்தாலும் பிற்பகுதி சாதிக்க வைக்கும்.

பரிகாரம்:

திருக்கோவிலூரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீவியாக்ரபாதேஸ்வரரையும், நீலவிசாலாட்சி அம்மனையும் பௌர்ணமி திதி நாளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். வளம் பெருகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்