ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: கும்பம்

சனி, 1 டிசம்பர் 2012 (19:35 IST)
FILE
விழுவதெல்லாம் எழுவதற்கே என நினைப்பவர்களே! உங்களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டங்களில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை ஒரு வேலையையும் முழுமையாக பார்க்க விடாமல் தடுத்த ராகுபவான் இப்பொழுது ஒன்பதாம் வீட்டில் வந்தமர்கிறார். முடியாது என்றிருந்த பல காரியங்களை இனி முடித்துக்காட்டுவீர்கள். பதுங்கியிருந்த நீங்கள் இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள். குடும்பத்தினருடன் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் என்று சங்கடத்திற்கு ஆளானீர்களே! இனிமேல் உங்களின் ஆலோசனையின்றி ஒன்றும்செய்யமாட்டார்கள்.

கணவன்-மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும். குழந்தை இல்லாமல் கோவில், குளமென்றும் என்று சுற்றிக் கொண்டிருந்த தம்பதியர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். எவ்வளவோ உழைத்தும் கையில் ஒரு காசு கூட தங்கவில்லையே என வருந்தினீர்களே! இனி நாலுகாசு தங்கும். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் போய் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். அவ்வப்போது தூக்கம் வராமல் அவதிபட்டீர்களே! அந்த நிலை மாறும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் தன-லாபாதிபதியான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் கல்யாணம், சீமந்தம், காது குத்து, கிரகப் பிரவேசம் என வீடு களைக்கட்டும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பதவிகள் தேடி வரும்-. வேலைக் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். புது சொத்து வாங்குவீர்கள். ஆடை, அணிகலன் சேரும். சொந்த-பந்தங்கள் மெச்சுவார்கள்.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் குடும்பத்தில் கூச்சல், குழப்பங்கள், செலவினங்கள், இனந்தெரியாத கவலைகள், கனவுத் தொல்லை வந்துச் செல்லும். உடம்பில் இரும்புச் சத்து குறையும். பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். காய், கனி, கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாகனத்தை இயக்கும் போது அலைபேசியில் பேச வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். முக்கிய பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள்.

சேவகாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் ஒருவித பயம், படபடப்பு வந்துச் செல்லும். உடன்பிறந்தவர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. பழைய கடனை நினைத்து அவ்வப்போது கவலைப்படுவீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம்.

ராகு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் அப்பாவுக்கு ஆரோக்யம் குறையும். சிலநேரங்களிலஅவருடன் கருத்துவேறுபாடுகள் வரும். பேச்சை குறைத்து சண்டைய குறையுங்கள். பூர்வீக சொத்தை விற்று வேறிடத்தில் இடம் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிக்கும்படி உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ஆடை ஆபரணங்கள் சேரும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அவர்களின் துணையுடன் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். சோர்வு, களைப்பு நீங்கும். நினைத்தபடி திருமணம் முடியும். பாதியிலேயே விட்ட கல்வியை தொடர்வீர்கள். மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். விளையாட்டுப் போட்டியில் பரிசு, பாராட்டு கிட்டும். அரசியல்வாதிகள் சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எனினும் மற்றவர்களை விமர்சித்து பேசவேண்டாம்.

வியாபாரத்தில் பழைய சரக்குகளை சலுகைகள் மூலம் விற்றுத்தீர்ப்பீர்கள். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். இரும்பு, பருத்தி, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ரசாயன வகைகள் மூலம் ஆதாயமடைவீர்கள். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். 10-ம் வீட்டில் இதுவரை ராகு நின்றுகொண்டு உத்யோகத்தில் வீண்பழியையும், வேலைச்சுமையையும் கொடுத்தாறே, இனி 9-ல் நுழைவதால் அந்த நிலை மாறும்.

உங்களை தரக்குறைவாக நடத்திய மேலதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். உங்களின் வெகுநாள் கனவான பதவியுயர்வு இனி கிடைக்கும். வேலைச்சுமை குறையும். கணினி துறையினர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பேசப்படும். வராமலிருந்த சம்பளபாக்கி கைக்கு வந்து சேரும். வீண் வதந்திகள், கிசுகிசுக்களிலிருந்து விடுபடுவார்கள்.

கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதத்திலும் அவஸ்தைப்படுத்திய கேது பகவான் இப்போது மூன்றாவது வீட்டிலே முகமலர்ந்து அமர்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். சங்கடங்கள் தீரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். அவரின் உடல்நிலை சீராகும். ஆனால் இளைய சகோதரருடன் பனிப்போர் வந்துநீங்கும். கொஞ்சம் அனுசரித்துப் போங்கள். பிரபலங்கள், தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு நெருக்கமாவீர்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் சப்தமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 02.12.2012 முதல் 02.02.2013 வரை கேதுபகவான் செல்வதால் மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தள்ளிப் போன திருமணம் முடியும். அரசால் ஆதாயம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும்.

உங்கள் சுக-பாக்யாதிபதியான சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் 03.02.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய நகையை மாற்றி புதுசு வாங்குவீர்கள். வீடு கட்டுவீர்கள். குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் கிடைக்கும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். தாய்வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வாகனம் வாங்குவீர்கள். தந்தை வழி சொத்து வந்து சேரும்.

கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அசுவனி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.06.2014 வரை கேது செல்வதால் தைரியம் பிறக்கும். சவாலான காரியங்களையும் எளிதில் முடிப்பீர்கள். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்பார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வேற்றுமதத்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

பூர்வீர்கச் சொத்துப் பிரச்சனை முடிவுக்கு வரும். சொந்த ஊரில் உங்களை மதிப்பார்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பணப்பற்றாக்குறையால் அரைகுறையாக வீடு கட்டும் பணி நின்றுபோனதே! இனி முழுமையாக கட்டி முடிப்பீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். உயரக வாகனங்கள் வாங்குவீர்கள். தங்க நகை சேரும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் கூடுதலாக அறை கட்டுவார்கள். பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது நல்லது. அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.

வியாபாரத்தில் பழைய சரக்குகளை எளிதாக விற்பீர்கள். புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். முரண்டு பிடித்த வேலையாட்கள் இனி பொறுப்பாக வேலை பார்ப்பார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். உயரதிகாரி பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும், புதிய வாய்ப்புகள் வந்தமையும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த பகை நீங்கும்.

இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியில் ராகுவால் முட்டுக்கட்டைகள் இருந்தாலும், கேதுவால் எதையும் சாதிக்கும் வல்லமையுண்டாகும்.

பரிகாரம்:
ஈரோடுக்கு அருகேயுள்ள கொடுமுடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ள ஊஞ்சலூர் எனும் தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீநாகேஸ்வரரை வணங்குங்கள். அகதிகளுக்கு உதவுங்கள். நினைப்பதெல்லாம் நிறைவேறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்