உள்ளங்கையில் பெருக்கல் குறி போன்ற அமைப்பு காணப்படுவது இயற்கையா?

சனி, 24 ஜனவரி 2009 (18:40 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.விதயாதரன்:

பெருக்கல் குறி எந்த மேட்டில் உள்ளது (அதாவது குரு மேடு/புதன் மேடு/சுக்கிரன் மேடு) என்பதை முக்கியமாகப் வேண்டும். அதேபோல் இரு கோடுகளும் ஒரே அளவில் உள்ளதா அல்லது ஒரு கோடு நீளமாக, மற்றொரு கோடு சிறிதாக உள்ளதா என்பதையும் ஆராய வேண்டும்.

சில சமயம் பெருக்கல் குறி, முக்கோண வடிவில் அமைவது உண்டு. அந்த மாதிரி முக்கோண வடிவத்தில் பெருக்கல் குறி அமைவது சிறப்பான பலன்களைத் தரும். அதே வேளையில், அதிகமான பெருக்கல் குறிகள் உள்ளங்கையில் காணப்படுவதும் நல்லதல்ல. அது குழப்பங்கள், தடுமாற்றங்கள், மன உளைச்சல், அடுத்தடுத்து தோல்வி, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றை அடுத்தடுத்து ஏற்படும். எனவே அதிகமான பெருக்கல் குறிகள் கூடாது. ஒன்று அல்லது இரண்டு இருப்பது நலம்.

உள்ளங்கையில் பெருக்கல் குறி இருந்தால் திடீர் முன்னேற்றம், அதிரடி பணவரவு உள்ளிட்டவை கிடைக்கும். அதிலும் புத்தி ரேகைக்கும் (கையின் மத்தியில் இருப்பது), இருதய ரேகைக்கும் (விரல்களுக்கு அருகே இருப்பது) நடுவில் பெருக்கல் குறி இருப்பது இன்னும் நல்லது. இவர்கள் சிந்தனையாளர்களாகவும், மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாகவும் காணப்படுவர்.

மூன்றுக்கு மேற்பட்ட பெருக்கல்கள் குறிகள் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. அது குழப்பதையும் தடுமாற்றதையும் தரக்கூடியது.

வெப்துனியாவைப் படிக்கவும்