2009 ஆங்கில வருட‌ப் பலன் : மீனம்

புதன், 31 டிசம்பர் 2008 (18:21 IST)
மண் குடிசையில் இருந்து மாளிகை வீட்டிற்குள் குடி புகுந்தாலும் பழசை மறக்கவும் மாட்டீர்கள். மறைக்கவும் மாட்டீர்கள். உங்கள் ராசிநாதன் லாபவீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிலும் ஏற்றம் உண்டாகும். தாழ்வு மனப்பான்மை, மனஉளைச்சல் நீங்கும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகம். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் பிடிவாதம் விலகும்.

பழைய கடன் தீரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டு. மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஏளனமாகப் பார்த்த உறவினர்களுக்கு பதிலடி தருவீர்கள். மழலை பாக்யம் கிடைக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நிலம், வீடு வாங்குவதில் இருந்த சிக்கல்கள் தீரும். கமிஷன் மூலம் பணம் வரும்.

ஜனவரி, பிப்ரவரி, ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் திடீர் திருப்பம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணி விரைந்து முடியும். அரசு காரியங்களில் வெற்றி கிட்டும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 வரை ராசிக்குள் சூரியன் செல்வதால் வயிற்று வலி, வீண் வாக்குவாதங்கள், உடல் உஷ்ணம் அதிகரித்தல், மனக்குழப்பம், காரியத் தாமதம் வந்து நீங்கும். மார்ச் 6 முதல் மே 22 வரை செவ்வாயின் போக்கு உடன்பிறந்தவர்களிடம் விவாதங்கள் வேண்டாம். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். கோபத்தால் நல்ல நண்பர்களை இழக்க நேரிடும். அக்காலக்கட்டங்களில் கர்ப்பினிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. மின்சாரம், மின்னணு சாதனங்கள் பழுதாகும். வாகனப் பழுது வந்து நீங்கும்.

வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் மனதளவில் இருந்த போராட்டங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வேலைசுமை குறையும். இந்த 2009-ம் ஆண்டு உங்களுக்கு சமூகத்தில் வி.ஐ.பி அந்தஸ்தை தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்