சரியோ, தவறோ எதையும் நேரடியாக சொல்லும் திறந்த மனதுக்காரர்களான் நீங்கள், யார் எந்த உதவி கேட்டாலும், பிரதிபலன் பாராமல் சட்டென செய்து முடிப்பவர்கள் .இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 12வது ராசியான விரைய ராசியில் பிறப்பதால் கொஞ்சம் செலவுகளும், அலைச்சலும் இருக்கத்தான் செய்யும். ஜனவரி, பிப்ரவரியில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.
கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன வாக்கு வாதங்களும், மனஸ்தாபங்களும் வந்து போகும். என்றாலும் ஒற்றுமை பாதிக்காது. பழைய கடன் பிரச்சனை தீரும். சகோதர, சகோதரிகளிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். ஏப்ரல், மே மாதங்களில் புது வீடு, மனை வாங்க திட்டம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். பழைய சொந்தங்கள் தேடி வரும். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும், குடும்ப சூழ்நிலை புரிந்து நடந்துக் கொள்வார்கள்.
உங்கள் மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் கவனம் தேவை. புது வாகனமும் வாங்கும் யோகமும் உண்டு. திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் அடிக்கடி உதவி கேட்டு வருவார்கள். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். குலதெய்வப் பிராத்தனைகளை முடிப்பீர்கள்.
வருடத்தின் பிற்பகுதி செப்டம்பர், அக்டோபர், நவம்பர் 15 ஆம் தேதி வரை அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வியாபாரத்தில் தொய்வு நிலை மாறும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையாட்களை அரவணைத்துச் செல்லுங்கள். உணவு, மூலிகை வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் தனிநபர் விமர்சனத்தை தவிர்க்கவும். புது வேலை வாய்ப்புகள் தேடி வரும். கன்னிப் பெண்களுக்கு சுபகாரியங்கள் ஏற்பாடாகும். பெற்றோரை கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுங்கள். கசந்த காதல் இனிக்கும்.மாணவ,மாணவிகள் உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். கலைஞர்களுக்கு அதிரடியான திருப்பங்கள் நிகழும். மூத்த கலைஞர்களின் ஆதரவை பெறுவீர்கள்.
பரிகாரம் :
தஞ்சாவூருக்கு அருகில் தென்குடித்திட்டையில் எழுந்தருளியிருக்கு பசுபதீஸ்வரர்-உலகநாயகி அம்மையை வணங்குங்கள்.