வெள்ளை மனசுக்காரரான நீங்கள், உண்மையே பேசி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். கலை நய சிந்தனையும், கடின உழைப்பால் எதையும் சாதித்துக் காட்டும் திறனும் கொண்டவர்கள் நீங்கள்தான். இதுவரை உங்களை படாதபாடு படுத்திவந்த சனி பகவான் உங்களை விட்டு முழுமையாக இப்போது விலகுகிறார். ராஜ யோகம் தரும் வீடான 3ஆம் வீட்டில் அமர்ந்து, சகல யோகங்களையும் உங்களுக்கு தரப் போகிறார்.
குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் பெரிய சண்டை எல்லாம் வந்ததே! சிலர் தம்பதியர்கள் சந்தேகத்தால் பிரிந்தீர்களே! அந்த அவல நிலை இனி மாறும். ஒருவரை ஒருவர் இனி புரிந்து கொள்வீர்கள். சேமித்து வைத்த பணத்தில் சொந்த வீடு வாங்குவீர்கள். பழைய கடனை அடைப்பீர்கள். பிள்ளைப் பாக்கியம் உடனே கிடைக்கும். உங்கள் மகனின் போக்கில் நல்ல மாற்றம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும்.
சொந்த ஊரில் மதிப்பு கூடும். உடன் பிறந்தவர்களுக்கு தக்க சமயத்தில் உதவுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள், நண்பர்கள் இனி வலிய வந்து பேசுவார்கள். தோல் நோய் நீங்கும். கன்னிப் பெண்களுக்கு காதல் இனிக்கும். உயர் கல்வி பெறுவதில் இருந்த தடை நீங்கும். பெற்றோரின் ஆதரவு உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அயல்நாடு பயணம் சென்று வருவீர்கள். மாணவ, மாணவிகளுக்கு இனி மறதி நீங்கும். தேர்வில் அதிக மதிப்பெண்களை குவிப்பார்கள்.
அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்வீர்கள். அனுபவம் மிக்க நல்ல வேலையாட்களெல்லாம் வந்து சேருவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உணவு, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சம்பளம் கூடும். கலைஞர்களுக்கு அரசு விருது கிடைக்கும்.
இந்த சனி மாற்றம் அதிரடியான பல மாற்றங்களை தருவதுடன், பணப்புழக்கத்தையும் அள்ளித்தருவதாக அமையும்.
பரிகாரம் : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ காலபைரவரை தேங்காய் தீபமேற்றி வணங்குங்கள். மனக்குழப்பங்கள் நீங்கும்.