சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - துலாம்

கொடுத்துச் சிவந்த கைகளுடைய நீங்கள், எவரிடமும் உதவி கேட்டு கை நீட்ட மாட்டீகள். பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவீர்கள். இதுவரை ராசிக்கு 10ம் வீட்டில் நின்ற சனி இப்பொழுது லாப வீட்டில் வந்தமர்வதால் உங்களை பலவகையில் முன்னேற்றப்படுத்துவார். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவருடன் வாக்கு வாதங்கள், வீண் சந்தேகம் எல்லாம் இனி நீங்கும். எதிலும் ஆர்வம் உண்டாகும்.

பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். உங்கள் மகளுக்கு திருமணம் முடியாமல் தடைபட்டதே, இனி நல்ல இடத்தில் வாழ்க்கைத் துணை அமையும். புது வேலை கிடைக்கும். இருந்தாலும் பிள்ளைகளின் ஸ்தானத்தைச் சனி பார்ப்பதால் அவர்களின் நடவடிக்கைகளின் மீது ஒரு கண் வைப்பது நல்லது. சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு.

சொத்து விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாகக் கலந்து யோசிப்பது நல்லது. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு தடைபட்ட கல்யாணப் பேச்சு வார்த்தைகள் இனி வெற்றியடையும். நண்பர்கள், உறவினர்களிடையே மதிப்பு, மரியாதை கூடும். மாணவ, மாணவிகள் வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். மதிப்பெண் உயரும். கவிதை, கட்டுரை, இலக்கியம், இசையில் ஆர்வம் பிறக்கும். உடல் பருமனாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உணவு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். அயல்நாட்டுப் பயணங்கள் உண்டு. சமூக சேவையில் நாட்டம் அதிகரிக்கும்.

அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புதுயுக்திகளை கையாளுவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். கம்ப்யூட்டர், மருந்து, உணவு வகைகளால் முன்னேற்றம் உண்டு. புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். தொல்லை தந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். சம்பளம் உயரும். சலுகைகள் கிடைக்கும். புது வேலை தேடி வரும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். கலைஞர்களுக்கு நழுவிச் சென்ற வாய்ப்புகள் தேடி வரும்.

இந்தச் சனிப் பெயர்ச்சி தடைபட்ட பல வேலைகளை இனிதாக முடிக்கும் திறனையும், வசதி, வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை சென்று வணங்குங்கள். முடிந்தால் கிரிவலம் வாருங்கள். எதிர்ப்புகள், தடைகள் உடைபடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்