சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - கும்பம்

நாடி வந்தவர்களுக்குக்கெல்லாம் நல்லதையே செய்யும் குணமுடைய நீங்கள், யாருக்கும் தீங்கு எண்ணமாட்டீர்கள். கடமையுணர்வுடன் நடந்துக் கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு 7வது வீட்டுக்கு சனிபகவான் வருகிறார். அர்த்தாஷ்டமச் சனியாச்சே என்று பயப்படதேவையில்லை. உங்கள் ராசிநாதனான சனி உங்களுக்கு நல்லதைத்தான் செய்வார். காரியத்தடைகள் விலகும்.

கணவன் - மனைவிக்குள் மனம் விட்டுப் பேசி, பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வது நல்லது. மூன்றாவது மனிதரை மூக்கை நுழைக்க விடாதீர்கள். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். உங்க பெண்ணுக்கு நல்ல வரன் அமையும். உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். அவ்வப்போது தலைவலி, வாயுக் கோளாறு வந்து போகும். மாமியாரிடம் அனுசரித்துப் போகப் பாருங்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தனி நபர் விமர்சனத்தை தவிர்க்கவும்.

நீண்ட நாளாகப் போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பிரியமானவர்களைச் சந்திப்பதன் மூலம் மன நிம்மதி கிட்டும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். தாய் வழி உறவினர்களிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து போகும். கன்னிப் பெண்களுக்கு தாயுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மாறும். கசந்த காதல் இனிக்கும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும். தந்தையின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வெளியூர் பயணங்கள் அலைச்சல் தருவதாக அமையும். பணத்தட்டுப்பாடு ஓரளவு குறையும். வாகனத்தால் வீண் செலவுகள் வரக்கூடும். வாகனத்தை இயக்கும் போது கவனத்தைச் சிதற விடாதீர்கள்.

அயல்நாட்டிலிருப்பவர்களின் ஆதரவு கிட்டும். அரைகுறையாக நின்றுபோன கட்டிட வேலைகளை இனி முழுமையாக முடிப்பீர்கள். மாணவ-மாணவிகள் உயர் கல்வியில் வெற்றி பெறுவார்கள். நல்ல நட்பு வட்டம் அமையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் சந்தர்ப்பம் அறிந்து செயல்படுவீர்கள். கொடுக்கல்&வாங்கலில் நிம்மதி ஏற்படும். அனுபவமிகுந்த வேலையாட்களும் இனி வந்து சேருவார்கள். உத்தியோகத்தில் உங்களைப் பற்றித் தவறாக நினைத்திருந்த மேலதிகாரி இப்பொழுது நட்புறவாடுவார்கள். திறமைகள் வெளிப்படும். சம்பளம் உயரும். கலைஞர்களுக்கு இனி புது வாய்ப்புகள் தேடி வரும். மூத்த கலைஞர்களின் பாராட்டுதலைப் பெறுவார்கள்.

இந்தச் சனிப் பெயர்ச்சி உங்களைத் தகுதியை வெளிப்படுத்துவதுடன், பணப் புழக்கத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம் : நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் அல்லது வடைமாலை சாற்றி வணங்குங்கள். குழப்பங்கள் நீங்கி மபலம் கூடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்