கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள், மற்றவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்பவர்கள். உங்களின் இராஜ யோக வீடான 6 ஆம் வீட்டில் வந்தமரும் சனிபகவான் இனி பல இன்ப அதிர்ச்சிகளை தருவார். தொட்டகாரியம் துளிர்க்கும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.
குழப்பமான சூழலும், எதிலும் தடுமாற்றமான நிலையுமே நிலவியதே! அதிரடியானத் திட்டங்களை இனி அசுர வேகத்தில் எடுப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டீர்களே, இனி குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக்கொள்வார்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். குடும்ப வருமானத்தைப் பெருக்க புதிய வழி முறைகளைக் கையாளுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். குழந்தை இல்லையென வருந்திய தம்பதியர்களுக்கு இனி குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கன்னிப் பெண்கள் கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள்.கசந்த காதல் இனிக்கும். புதிய வேலை கிடைக்கும். மனதில் பல ஆசைகள் இருந்தும் அதனை நிறைவேற்ற முடியவில்லையே என அவ்வப்போது வருந்தினீர்களே! இனி ஒவ்வொன்றாக நிறைவேறும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். அறைகுறையான நின்ற கட்டிடப் பணிகளும் முழுமையடையும். பூர்வீகச் சொத்திலிருந்த பிரச்னைகள் நீங்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களின் கனவுகள் நனவாகும். ஆடை ஆபரணங்கள் சேரும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.தடைபட்டு வந்த குல தெய்வப்பிராத்தனைகளை இப்பொழுது நிறைவேற்றுவீர்கள்.
மாணவ-மாணவிகளுக்கு நினைவாற்றல் கூடும். ஆசிரியர்களின் அன்பைப் பெறுவீர்கள். விளையாட்டு, கவிதை, இலக்கியம் இவற்றில் வெற்றி பெறுவீர்கள்.வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, இரும்பு, எலக்ட்ரானிக்ஸ் வகைகளால் லாபம் உண்டு. மறைமுகப் போட்டிகளைப் பந்தாடுவீர்கள். உத்யோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.மேலதிகாரியின் ஒத்துழைப்பு உண்டு. எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தேடி வரும். சக ஊழியர்களால் மகிழ்ச்சியுண்டு. கலைஞர்களுக்கு பெரிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். பரிசு பாராட்டு கிடைக்கும்.
இந்தச் சனிப்பெயர்ச்சி பொறுத்திருந்த உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும், பெருமைகளையும், வாழ்வில் உயர்ந்த அந்தஸ்தையும் தருவதாக அமையும்.