ஒரு‌ ‌சிலரை எ‌ந்த நா‌ய் பா‌ர்‌த்தாலு‌ம் துர‌த்து‌‌கிறது - காரண‌ம் எ‌ன்ன?

புதன், 27 ஜூலை 2011 (20:59 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: நண்பர் ஒருவர் இருக்கிறார். தற்பொழுது உயர் பதவியில் கூட இருக்கிறார். அவர் ஒரு நாத்திகவாதி. ஆனால் அவரை மட்டும் எப்பொழுது பார்த்தாலும் நாய் துரத்துகிறது. எந்த நாய் பார்த்தாலும் உறுமுகிறது. காரணம் என்ன?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: அவர் நாத்திகவாதியாக இருக்கலாம். ஆனால் எங்களுடைய கணக்குப் பிரகாரம் சனி திசை, சனி புத்தி நடந்தாலும் நாய் துரத்தும். ஏழரை சனி நடக்கிறவர்கள் எத்தனையோ பேரை நான் எச்சரித்துள்ளேன். நாய் கடிக்கும், காக்கா மண்டையில் வந்து தட்டும் கவனமாக இருங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.

வெளியில் இடங்களில் சிறுநீர் கழிக்க நேர்ந்தால் சுத்தப்படுத்திவிட்டு சிறுநீர் கழியுங்கள். இல்லையென்றால் சிறுநீர் தொற்று வரும். இதெல்லாம் சனியால் ஏற்படக்கூடிய உபாதைகள். இதையெல்லாம் சொல்லியே அனுப்பியிருக்கிறோம். அவருடைய பிறந்த தேதி படி, ஒன்று அவருக்கு சனி திசை இருக்கும். இல்லையென்றால் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி எதாவது ஒன்று நடக்கும்.

வாழ்நாள் முழுவதும் அவரை நாய் துரத்திக்கொண்டுதான் இருக்கிறது?

வாழ்நாள் முழுவதும் நாய் துரத்துகிறது என்றால், சனி லக்னத்தில் உட்கார்ந்து செவ்வாயுடைய பார்வை அல்லது செவ்வாயுடைய சேர்க்கை என்பது கண்டிப்பாக இருக்கும். அப்படி இருந்தாலும் விஷக்கடிகள் ஏதாவது படும் வரை நாய்கள் அவரைத் துரத்தும். ஏனென்றால் சனியும் செவ்வாயும் லக்னத்தில் இருந்து சனி திசை, செவ்வாய் திசை நடந்தாலோ அல்லது சனி, செவ்வாயை சுப கிரகங்கள் எதுவும் பார்க்காமல் இருந்தால் எங்கு போனாலும் எந்த நாயும் அவரைத் துரத்தும். அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்