‌திடீ‌ர் மன‌க் குழ‌ப்‌ப‌ங்க‌ள் எதனா‌ல் ஏ‌ற்படு‌கிறது?

புதன், 29 ஜூன் 2011 (21:45 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ஒரு விதமான மனக் குழப்பம் - ஒரு மாதிரி குழப்பமாக இருக்கிறது - என்றெல்லாம் சொல்கிறார்கள் சிலர் சில வேளைகளில். பொதுவாக, அவர்கள் இப்படி சொல்வதற்கான காரணம், ஒரு விடயத்தைப் பொறுத்த சரியான புரிதல் இல்லை என்பதா? மாறாக, தற்பொழுது இந்த விஷயத்தில் முடிவெடுத்தால் சரியாக இருக்காது என்பதா? அல்லது நட்சத்திரங்கள், கிரங்களினுடைய நிலையால் அவர்களுக்கு இதுபோன்ற மனக் குழப்பங்கள் ஏற்படுகிறதா?

ஜோ‌திர‌த்னமுனைவ‌ர் க.ப‌.‌வி‌த்யாதர‌ன்: மனத் தெளிவைக் கொடுப்பது சந்திரன். மனக் குழப்பத்தைக் கொடுத்து தெளிவை உண்டாக்குவது சனி. இந்தச் சனி மோசமான இடத்தில் இருந்தாரென்றால் எப்பொழுதுமே குழம்பி இருப்பார்கள். மேல் மாடியில் இருக்கிறார் என்று சொல்வார்களே, நம்முடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார், கூட்டத்திலும் கலந்திருப்பார். ஆனால் வேறு எதையோ யோசித்துக் கொண்டிருப்பார். மேல் மண்டலம், அதாவது மேல் மண்டை வேறு எதையாவது யோசித்துக் கொண்டிருக்கும்.

இதற்கெல்லாம் உரிய கிரகம் சனிதான். ஆழ்நிலை தியானத்திற்கே உரிய கிரகமே சனிதான். ஒரு பொருளைப் பற்றி, ஒரு தலைப்பைப் பற்றி ஆழமாக யோசிப்பதே சனி பகவான்தான். குழப்பம், தடுமாற்றத்தைக் கொடுப்பது சனி பகவானைப் போல யாராலுமே முடியாது. தடுமாற்றம் என்றால் அப்படிப்பட்ட தடுமாற்றம். பிறகு தூக்கம் என்றால் அப்படிப்பட்ட தூக்கம். கால நேரம் இல்லாமல் தூங்குவது என்று சொல்வார்களே, இதெல்லாம் சனியோட நிலைதான். கும்ப ராசியில் பிறந்தால் கும்பகர்ணன் போல இடைவிடாமல் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று சொல்வார்களே, கும்ப ராசி சனியோட ராசிதான். அதனால் சனி பகவான் நம்முடைய ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும்.

5ஆம் இடம்தான் ஆட்டிடியூட். 5ஆம் இடம்தான் மனநிலைக்கு உரிய கிரகம். 5ஆம் இடத்தில் சனி இருந்தாலோ, 5ஆம் இடத்தை சனி பார்த்தாலோ, 5க்குரியவர்கள் சனியோடு சம்பந்தப்பட்டிருந்தாலோ இதுபோன்ற இழிநிலை உண்டாகும். தடுமாற்றம், எதை எடுத்தாலும் இரட்டை பதிலைச் சொல்வது போன்றெல்லாம் கொடுக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்