க‌ச்ச‌த் ‌தீவை ‌‌மீ‌ட்க முடியுமா?

சனி, 25 ஜூன் 2011 (19:49 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற வழக்கில் தமிழக அரசு தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. கச்சத் தீவு மீட்பு என்பது இரு நாடுகளுக்கு இடையேயான விடயது. இரு நாடுகளு‌ம் ஒ‌ப்ப‌ந்த‌ம் செ‌ய்துகொ‌ள்ள‌ப்ப‌ட்டது எ‌ன்றெ‌ல்லா‌ம் சொ‌ல்‌கிறா‌ர்க‌ள். இப்படிப்பட்ட நிலையில், தமிழக அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கையால் கச்சத் தீவு நமக்குக் கிடைக்குமா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: இராகு கச்சை கட்ட வைக்குமே தவிர, தீவை மீட்டுத் தராது இந்த விஷயத்தைப் பொறுத்த வரைக்கும். "கச்சை கட்ட ஆளிருக்கிறது, க‌ஞ்சி ஊற்ற ஆளில்லை" என்று சொல்வார்களே அதுபோலத்தான். சும்மா வீம்புக்கு பேசவைப்பது. கச்சத் தீவைப் பொறுத்தவரைக்கும் இவர்களுடைய இராகு நல்ல பலனைத் தராது.

ஆனால், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் என்று சொல்வார்களே, அதுபோன்ற மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட சில உண்மைகளை வெளிக்கொணர்ந்து அதனை இவர்கள் தீவிரமாகப் பேசுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஆனால், பெரிய தீர்வோ அல்லது தீவை நாம் பெறக்கூடிய அளவிற்கோ இந்திய ஜாதகத்தில் இழந்ததைப் பெறக்கூடிய அளவிற்கு ஒன்றுமில்லை. இந்திய நிலப்பரப்பை அதிகப்படுத்தக்கூடிய அளவிற்கு இந்திய ஜாதகம் இல்லை. குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறதே தவிர, இழந்ததைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்