இ‌ன்றைய சூழ‌லி‌ல் ம‌த்‌திய அரசு எ‌‌வ்வளவு நா‌ள் ‌நீடி‌க்கு‌ம்?

வெள்ளி, 27 மே 2011 (19:18 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: 2009இல் 2வது முறையாக பதவியேற்ற மன்மோகன் சிங் அரசு இரண்டு ஆண்டுகளை முடித்துள்ளது. ஆனால் இவருடைய ஆட்சிக்கு எதிராக கடுமையான அதிருப்தி காங்கிரஸ் கட்சிக்குள்ளும், வெளியிலும் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இவர் இன்னமும் எவ்வளவு காலம் நீடிப்பார்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இந்த ஆண்டு, மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சி சில போராட்டங்கள், இழப்புகள், ஏமாற்றங்களை‌த் தொடர்ந்து சந்திக்க வேண்டிய சூழல் வரும். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி மிதுன ராசிக்காரர். அவருக்கு குரு, ராகு, கேது எல்லாம் நல்லதாக தற்போது மாறியிருந்தாலும் அவருடைய 4வது வீட்டில் சனி வந்து உட்கார்ந்திருக்கிறார். அதை அர்த்தாஷ்டமச் சனி என்று சொல்வார்கள்.

இந்த அர்த்தாஷ்டமச் சனி இருந்தாலே போராட்டங்கள், சிக்கல்கள் என மாறி மாறி கொடுக்கும். அணியிலேயே இருப்பவர்களின் எதிர்ப்புகளையெல்லாம் சந்திக்க வேண்டிய சூழல் வரும். அதற்கடுத்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ள கேரளா மாநிலத்தாலும் சில நெருக்கடிகள், பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

அடுத்ததாக, மன்மோகன் சிங் என்ற பெயரை வைத்துப் பார்க்கும் போது, அவர் சிம்ம ராசியில் வருகிறார். அவருக்கும் சில சிக்கல்கள் தொடரும். அதனால் எப்படிப் பார்த்தாலும், 'இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று ஓடிக் கொண்டிருக்கிறது' என்று சொல்வார்களே அதுபோலவும், சோனியா காந்திக்கு 4ல் சனி இருப்பதாலும் வழக்குகளில் இந்த அரசிற்கு எதிராக நீதிபதிகள் தீர்ப்பு கூறுவார்கள். இதுபோல, இவர்களுக்கு அடுத்தடுத்த சவுக்கடியாக வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அப்போது மக்கள் நம்பிக்கையற்ற நிலை உருவாவதற்கும் வாய்ப்பு உண்டு.

போராட்டங்கள், சிக்கல்கள், ஏமாற்றங்கள் - நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று சொல்வது போல - அப்படியேதான் ஓடிக் கொண்டிருக்கும். டிசம்பரை தாண்டியபின் சில மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஜனவரியில் இருந்து ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கொஞ்சம் பலம் கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்