உணவு‌ப் பொரு‌ள் ப‌ற்றா‌க்குறை தொடருமா?

சனி, 30 ஏப்ரல் 2011 (20:02 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: உணவுப் பொருள் உற்பத்தியில் இந்தியா பற்றாக்குறையிலேயே இருந்து வருகிறது. இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் அதிகரித்து வருகிறது. இது தொடருமா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: முறையான அமைப்புகள் இந்தியாவில் கிடையாது. மேலும், இந்தியாவினுடைய ஜாதகத்தில் அடுத்தடுத்த பெரிய சவால்கள் இருக்கிறது. இந்தியாவினுடைய ஜாதகத்தில் சனி சாதகமாக இருக்கிறார். ஆனால் டிசம்பர் 21க்குப் பிறகு சனி மிகவும் மோசமான இடத்திற்குச் செல்கிறார்.

அப்படி வரும்போது மிகப் பெரிய இழப்புகள், ஏமாற்றங்கள், உள்நாட்டுக் கலகங்கள், குழப்பங்கள், புரட்சிகள் அடுத்தடுத்து வெடிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. டிசம்பருக்குப் பிறகு இதுபோன்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

அதனால் அரசு இப்போதிலிருந்தே உணவு உற்பத்தியை எல்லாம் ஒழுங்குபடுத்தி, விவசாயத்தை வளர்ப்பதற்கான வழிவகைகளையெல்லாம் செய்தால் நல்லது. இல்லையென்றால் மிகக் கடினமாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்