தொட‌ர் ‌நிலநடு‌க்க‌ம் பேர‌ழி‌வி‌ற்கான அ‌றிகு‌றியா?

திங்கள், 25 ஏப்ரல் 2011 (18:22 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ஜப்பானில் மார்ச் 11ஆம் தேதி வரலாறு காணாத அளவிற்கு ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு பார்த்தால், 7.4, 7.6 ரிக்டர் அளவுகோலில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. தற்போது நியூஸிலாந்து, ஆஸ்ட்ரேலியா, பாகிஸ்தான் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதெல்லாம் எதாவது ஒரு பேரழிவிற்கான அறிகுறியாகத் தெரிகிறதா?

ஜோ‌திட ர‌‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: முன்கூட்டியே இராகு, கேது பெயர்ச்சியில் கூட சொல்லியிருக்கிறோம். மிதுனம், கன்னி இரண்டுமே புதனுடைய வீடுகள். இந்த புதன் வீடான மிதுனத்தில் கேது உட்கார்ந்திருக்கிறார். இந்தக் கேது புத்தமத நாடுகளையெல்லாம் அழிக்கக் கூடியது.

அதேபோல, கன்னியில் சனி உட்கார்ந்திருக்கிறார். டிசம்பர் 21 வரைக்கும் கன்னியில் சனி இருக்கப் போகிறார். அதுவரைக்கும் புத்த மத நாடுகளில் அதிகமான பாதிப்புகள் அடுத்தடுத்து உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு.

இதுவொரு உலகப் பேரழிவு போன்ற வாய்ப்புகளைக் கொடுக்கக் கூடியதுதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்