‌அ‌திகமான வா‌க்கு‌ப்ப‌திவு யாரு‌க்கு‌ச் சாதக‌ம்?

சனி, 23 ஏப்ரல் 2011 (20:04 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: தமிழக சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு 78 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. வாக்குப்பதிவு உயரும் என்பதை நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த அளவிற்கு வாக்குப்பதிவு உயர்ந்ததற்கான காரணம் என்ன?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: வாக்குப்பதிவு நாள் ஆயில்யம் நட்சத்திரத்தில் வருகிறது என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். எல்லாமே புதனுடைய நட்சத்திரல் வருகிறது. புதன்தான் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் முதன்மை பெற்ற கிரகம். பத்திரிக்கைகள், ஊடகங்கள் இதற்கெல்லாம் உரிய கிரகம் புதன். அந்த புதனுடைய ஆதிக்கத்தில்தான் வாக்குப்பதிவு நாள் வந்தது. ஆயில்யம் நட்சத்திரமும் புதனுடைய நட்சத்திரம்.

புதன் வித்தைக்காரகன், வித்யாகாரகன், கல்விகுரியவன் என்றெல்லாம் சொல்வார்கள். அதனால்தான் இந்த தடவை கல்வியாளர்கள் தங்களுடைய வாக்குகளை அதிகமாக பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோல, விமர்சனம் செய்யக்கூடிய கிரகமும் புதன்தான். அவரும் சரியில்லை, இவரும் சரியில்லை, எவருமே சரியில்லை யாருக்குமே வாக்களிக்க வேண்டாம் என்ற நிலை நிலவியது. அந்த வாக்களிக்க வேண்டாம் என்பதையும் இந்த முறை பதிவு செய்திருக்கிறார்கள். யாரும் வேண்டாம் என்பதையும் முதன் முதலாக இந்த ஆயில்யம் நட்சத்திரம் புதனுடைய ஆதிக்கத்தில் தேர்தல் நடந்ததால் அதையும் பதிவு செய்யக்கூடிய வாய்ப்பை தமிழக வரலாற்றில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது புதன்.

முழுக்க ஆயில்ய‌ம் நடத்திரத்தின் குணம் என்னவோ அது அத்தனையும் இந்த தேர்தல் நாளன்று வெளிப்பட்டுள்ளது. அதனால்தான் அனைவரும் முன்வந்து வரிசையில் நின்று, வாக்குப் பதிவு நேரம் முடிந்த பின்னும் வரிசையில் நின்றவர்கள் நின்று வாக்களித்து சென்றுள்ளனர். இது அனைத்தையும் புதனுடைய செயல்களையே காட்டுகிறது. முழுக்க முழுக்க இது புதனையே சாரும்.

இவ்வளவு பெரிய அளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளது ஆட்சியில் இருப்பவர்களுக்குச் சாதமாக இருக்குமா? எதிர்க்கட்சிக்கு சாதகமாக இருக்கும்?

இந்த வாக்குப்பதிவு எதிர்க்கட்சிகளுத்தான் சாதகமாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்