பொது‌ப் பல‌ன் அனை‌த்து ரா‌சி‌க்கார‌ர்களு‌க்கு‌ம் பொரு‌‌ந்துமா?

செவ்வாய், 29 மார்ச் 2011 (17:41 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: பொதுப்பலன் அனைத்து ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சரியாகப் பொருந்துமா? சிலருக்கு முற்றிலும் பொருந்துவதாகவும் அல்லது தலைகீழாகவும் இருக்குமா? என்று வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பொதுப் பலன் எப்படி கொடுக்கிறோம் என்றால், அதாவது பலன்கள் சொல்வதில் இரண்டு முறை இருக்கிறது. பிறக்கும் போது இருக்கும் தசா புத்திகள், கிரக அமைப்புகளை வைத்துச் சொல்வது. மற்றொன்று தற்கால கிரக நிலைகளை வைத்து பலன் கூறுவது. தற்கால கிரக நிலைகளை வைத்துதான் வாரப்பலன், தினப் பலன், வார ராசி, மாத ராசி, குருப்பெயர்ச்சிப் பலன்களையெல்லாம் கொடுக்கிறோம். தற்கால கிரக நிலைகளுக்கு வலிமை அதிகம். நல்ல தசா புத்தி நடக்காதவர்களுக்கு தற்கால கிரக நிலை வலிமையாக வேலை செய்யும். தசா புத்தி பலவீனமாக இருக்கிறவர்களுக்கு கோச்சார கிரகங்கள், அதாவது தற்போது எங்கெங்கு நன்றாக இருக்கிறதோ அதுமாதிரி.

ஒருத்தருக்கு மோசமான திசை நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது 6க்குரிய திசை, 8க்குரிய திசை, பாதகாதிபதி திசை நடந்து அவர்களுக்கு ஏழரைச் சனியும் வந்துவிட்டால் அவருடைய பாடு திண்டாட்டம்தான். அடிமட்டத்திற்குக் கொண்டுபோய்விடும். யோக திசை நடக்கும் போது மோசமான ஏழரைச் சனியெல்லாம் வருகிறதென்றால், அவர்களை அது காப்பாற்றும். ஏற்பக்கூடிய பாதிப்புகள் அவர்களுக்கு இல்லாமல் போகும்.

கோச்சாரப் பலன்களை வைத்துதான் ராசிப்பலன் சொல்கிறோம். ஆனால் அவரவர்கள் பிறந்த நேரத்திற்கு உரிய கிரக அமைப்புகள் தசா புத்திகளை அடிப்படையாக வைத்து கோச்சாரப் பலன்களின் எண்ணிக்கை அதிகமாவதோ குறைவதோ உண்டாகும். அதனால் அவரவர்கள் பிறந்த ஜாதகம் முக்கியம். அதில் நடக்கும் தசா புத்தியும் முக்கியம். கோச்சாரம் என்று அவுட்லைன் மாதிரி. அது ஒரு ஆழமான விஷயம் கிடையாது.

உதாரணத்திற்கு ஒருத்தருடைய 6வது வீட்டிற்கு சூரியன் வருகிறார். 6ல் சூரியன் வந்தால் திடீர் லாபம், திடீர் யோகம், அரசாங்கத்தால் பதவி, வழக்குகளில் வெற்றி போன்று உண்டாகும். 3வது வீட்டில் செவ்வாய் உட்கார்ந்தாரென்றால் புதிய முயற்சிகளில் வெற்றி போன்றெல்லாம் உண்டாகும் என்று சொல்கிறோம். அந்த நேரத்தில் சூரிய திசை, சூரிய புத்தி இருந்ததென்றால் அந்தப் பலன் அப்படியே நடக்கும். சூரியன் சாதகமாக இருந்து சூரிய திசை, சூரிய புத்தியும் நடந்து கோச்சாரத்திலும் சூரியன் 6வது வீட்டிற்கு வந்தால் அரசாங்கத்தில் பெரிய பதவிகள் கிடைப்பது போன்று உண்டாகும்.

ஆனால், அவருடைய ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக இருந்து, சூரியன் கெட்டவராக இருந்தால் நல்ல பலன்கள் கொஞ்சம் குறையும். அதனால் கோச்சாரப் பலன்களை வைத்து கொடுக்கும் ராசி பலன்களெல்லாம் ஒரு அவுட் லைன் அவ்வளவுதான்.

பொதுவாக ஒரு முடிவிற்கு வருவோம். இந்த வாரம் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார், கொஞ்சம் கடினமான வேலைகளை எடுத்துச் செய்யலாம். அடுத்த வாரம் கொஞ்சம் சுமாராக இருக்கும் சொல்கிறார், அந்த நேரத்தில் நிதானமாகச் செயல்படலாம் என்று முடிவெடுப்பது. இதெல்லாம் வியாபாரத்தில் இருப்பவர்கள், சினிமா துறையில் இருப்பவர்களுக்கு நாங்கள் சொல்லும் கணிப்பு அதிகமாகப் பயன்படுகிறது. ஏனென்றால் பெரும் தொகையை இவர்கள் களத்தில் இறக்குகிறார்கள். வியாபாரத்தில் சாதாரண பலசரக்குக் கடைகளிலேயே சில வாரத்தில் சரக்கு அப்படியே தங்கிவிடும். அந்த வாரம் பலன்கள் சரியாக இல்லையென்றால் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறையும். இதுபோன்று வியாபாரிகளை நாம் பார்க்கிறோம்.

அவர்களில் நிறைய பேர் இந்த வாரம் புதிதாக சரக்கு போடலாமா? இல்லை இருப்பதை வைத்தே தள்ளலாமா என்று கேட்பார்கள்? புது சரக்கு வேண்டாம், இருப்பதை தள்ளிவிட்டாலே பெரிய விஷயம் என்று சொல்வேன். அதற்கு அவரும் ஆமாம், கொஞ்சம் மந்தமாகத்தான் இருக்கிறது என்று சொல்வார். அடுத்த வாரம் சந்திரன் நன்றாக இருக்கிறது. புதனும் சாதகமாக வருகிறது. அதனால் புதிய சரக்குகளை வாங்கிப் போடுங்கள். அவரும் சொல்வார், கலெக்சன் நன்றாக இருந்தது. புதிதாக வாடிக்கையாளர்களும் வந்தார்கள். இவர்களெல்லாம் ஒவ்வொரு நாளும் ரிஸ்க் எடுத்து லாபம், நட்டத்தைப் பார்ப்பவர்கள். சினிமா துறையினர், நிறுவனத்தினர்களும் இதேபோல்தான். அதாவது பணப்புழக்கம் அதிகமுள்ள தொழில்களில் உள்ளவர்கள், கோச்சாரப் பலன்களில் அதிக ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். அடுத்த வாரம் அயல்நாடு செல்ல வேண்டும். ஒரு ஒப்பந்தத்தம் போட வேண்டியுள்ளது. அடுத்த வாரம் போனால் நடக்குமா? நடக்காதா?

நமக்குத் தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார் மாதத்திற்கு இரண்டு முறை ஜெர்மனி சென்று வருவார். அவர், என்றைக்கு டிக்கட் போடலாம். பா¤டன் என்றைக்கு பேசுவது, எல்லாவற்றிற்கும் கையெழுத்துப் போட்டுவிடுவாரா? என்றுதான் கேட்பார். ஒவ்வொரு தடவையும் கேட்பார். நான் ஒரு முறை இமயமலைக்குச் சென்றிருந்தேன். என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் பெரிய இழப்பெல்லாம் ஏற்பட்டிருக்கிறது அவருக்கு. இதுபோன்றெல்லாம் உண்டு. அதை அவர் உணர்கிறார். அதனால் கோச்சாரப் பலன்களை கேட்டுவிட்டுச் சென்றால் நல்லது என்று நினைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்