அ‌திமுக - தேமு‌திக கூ‌ட்ட‌ணியா‌ல் யாரு‌க்கு‌ச் சாதக‌ம்?

செவ்வாய், 22 மார்ச் 2011 (20:15 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த் இணைந்திருக்கிறார். இது தே.மு.தி.க. அல்லது விஜயகாந்திற்கு எந்த அளவிற்குப் பயன்படும். இல்லை, அ.தி.மு.க.விற்கு இந்தக் கூட்டணி பயனுள்ளதாக ஆகுமா? ஜோதிடம் பார்த்து அமாவாசை அன்று இரவு கூட்டணி அமைத்தார்கள். அப்படி அமைத்தால் அது நல்லதா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: அரசியல்வாதிகள் தன்னைப் பற்றி அதிகம் யோசிக்கிறார்களே இல்லையோ, தனக்கு எதிரானவர்களைப் பற்றி அதிகம் யோசிப்பார்கள். தற்பொழுது பெரிய பதவியில் இருக்கக்கூடிய தலைவர் அமாவாசை அன்று பிறந்தவர். அதனால் அமாவாசை அன்று கூட்டணி வைத்து சில முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 13.04.2011 அன்றைய நட்சத்திரத்தைப் பார்த்தால் ஆயில்யம் நட்சத்திரம் வருகிறது. இந்த நட்சத்திரம் சந்திரனுடைய ஆதிக்கத்தில் வருகிறது. சந்திரன் பூமிக்கு மிகவும் நெருக்கமாக உள்ள நேரத்தில், சந்திரன் தன்னுடைய ஆளுமைக்கு எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கிறார். முக்கிய நிகழ்வுகளையெல்லாம் தன்னுடைய நட்சத்திர நாளிலோ அல்லது தன்னுடைய ராசி நாளிலோ நிகழும்படி எல்லாவற்றையும் கொண்டு வருகிறார்.

பொதுவாக கார்த்திகையை கொஞ்சம் அழிவுக்குரிய நட்சத்திரம் என்று சொல்வார்கள். அதேபோல ஆயில்யம் நட்சத்திரத்தையும் சொல்வார்கள். இந்த நட்சத்திரத்தில் பயணங்கள் மேற்கொண்டால் சிரமங்கள் வரும். அதேபோல நோய்வாய் பட்டு படுத்துவிட்டால் மீண்டு எழுதல் கடினம் என்று சொல்வார்கள். அந்த நட்சத்திரத்தில்தான் தேர்தல் வருகிறது. அதனால் இந்தத் தேர்தலில் அழிவுகள் உண்டாகும். அமைதி ஏற்படாது. பழிவாங்கும் குணத்தை அதிகரிக்கும். தேர்தலிற்குப் பின்னும் அதிகரிக்கும்.

விஜயகாந்தை பார்த்தால் சித்திரை நட்சத்திரம் துலாம் ராசியில் பிறந்தவர். இவருக்கு மட்டும் இந்தத் தேர்தல் தேதி நட்சத்திரம் எல்லாம் சாதகமாக இருக்கிறது. சித்திரை நட்ச‌த்திரம் துலாம் ராசியில் 10வது ராசியில் தேர்தல் வாக்குப் பதிவு வருகிறது. அந்த 10வது நாளில் வருவதால் அவருக்கென்று சில அமைப்புகள் கூடிவரும்.

ஜெயலலிதா சிம்ம ராசி. சிம்மத்திற்கு எப்பொழுதுமே வாலி யோகம் என்று சொல்வார்களே, அதுபோல எதிரில் நிற்பவர்களையும், பக்கத்தில் நிற்பவர்களினுடைய சக்தியையும் இழுத்துக்கொள்வார்கள். இந்த மாதிரியான அமைப்புகள் சிம்மத்திற்கு எப்பொழுதுமே உண்டு. அதனால்தான் சிம்மத்துடன் சேராதே என்றெல்லாம் சொல்வதுண்டு. அதாவது அவர்கள் வலிமையானவர்கள் என்பதற்காக அப்படி சொல்வதுண்டு. அந்த வகையில் பார்க்கும் போது கேப்டன் வரவு இவர்களுக்கு மிகப்பெரிய சாதகத்தைக் கொடுக்கப் போகிறது.

ஜெயலலிதாவிற்கும் ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறது. விஜயகாந்திற்கும் ஒருபக்கத்தில் ஏழரை சனி நடந்து கொண்டிருந்தாலும் கூட்டணித் தலைவர்கள் ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் போது அதிமுக தலைமைக்கு பலம் கூடுகிறது.

இந்தக் கூட்டணியின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?

ஆயில்யத்தில் தேர்தல் நடக்கயிருப்பதால் கூச்சல், குழப்பம், அச்சம், எந்த நேரத்தில் எது நடக்குமோ என்ற கவலை, இதுதவிர இந்த தடவை தலைமைப் பொறுப்பேற்பவர்களுக்கு கண்டங்கள், விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சரியான தேதியாகப் பார்த்து பதவியேற்றால்தான் நல்லது. அப்படி இல்லாதபட்சத்தில் தலைமை மாறுதல், ஆட்சி மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்