அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது ஏன்?

வெள்ளி, 18 மார்ச் 2011 (17:38 IST)
FILE
தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி முடிவு செய்துக்கொள்ளாமலேயே அ.இ.அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதனால் அக்கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது எதன் தாக்கத்தால் உருவானது?

ஜோதிட ரத்னா க.ப.வித்யாதரன்: தேர்தல் தேதி 13 அதாவது கூட்டல் எண் 4 ஆகிறது. அந்த 4க்குரிய கிரகம் இராகு. அந்த இராகு என்பது நிழல் கிரகம். அதனால்தான் இந்த முக்கியத் தலைவர்களுக்கு நிழலாக இருப்பவர்களால் கடைசி வரை குழப்பம் இருந்துகொண்டே இருக்கும்.

இப்படி நிழலாக இருப்பவர்கள் நிஜமாக முயற்சிப்பார்கள். அதுதான் தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைமையிடங்களிலும் - அதாவது வீடுகளிலும் நடந்துகொண்டிருக்கிறது. 4 இராகுவின் எண் என்றால் அதற்கு எதிர் எண் 7, அது கேதுவிற்கு உரியது. இது தலை என்றால் அது வால், அது வால் என்றால் இது தலை. எனவே எப்போது தலை வாலாகும், வால் தலையாகும் என்று கூற முடியாது.

4ஆம் எண்ணில்தான், அதாவது 13ஆம் தேதிதான் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையும் நடைபெறப்போகிறது. அதனால்தான ஜெயலலிதா அதற்கு எதிரான 7ஆம் எண்ணில், அதாவது கூட்டினால் 7 வருவதுபோல் 16ஆம் தேதியன்று, 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். இது உடனடியாக விரிசல், குழப்பம் என்றேல்லாம் உருவாக்கிவிட்டது. இதுதான் 4க்கும் 7க்கும் உள்ள முரண்பாட்டின் விளைவாகும்.

4ஆம் எண்ணி்ற்கு வசிய எண் 1ம் 6ம் ஆகும். இப்போது குழப்பத்திற்கு தீர்வு கண்டுக்கொண்டிருக்கும் அ.இ.அ.தி.மு.க. தலைமை, போட்டியிடும் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 1 அல்லது 6ஆக அமையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது 141, 145 என்று பார்த்துக்கொள்ள வேண்டும். இது வெற்றி வாய்ப்பைக் கொடுக்கும்.

இராகு, கேது பிடியில் அ.இ.அ.தி.மு.க. உள்ளதால், அக்கட்சியின் தலைமை யாரையும் நம்பாமல், எல்லா விடயத்திலும் தானே இறங்கி, முடிவெடுத்து செயல்படுவது நல்லது.

முக்கியமான கிரகங்களான சூரியன், குரு ஆகியன சனியின் பார்வையில் உள்ளன. மே 2ஆம் தேதி செவ்வாயும் சனியின் பார்க்குள் வருகிறது. புதனும் சனிப் பார்வையில் சிக்குகிறது. இதனால் பிரதான கட்சிகள் வலுவிழக்கும். உதிரி கட்சிகள் பலமடையும்.

ஆயில்ய நட்சத்திரத்தில்தான் தேர்தல் நடக்கவுள்ளது. அது புதனின் நட்சத்திரம். அந்த நட்சத்திரம் மிக வலுவானது. சாதாரணமானவருக்கும் உரிமை பெற்றுதரும் நட்சத்திரமாகும். திடீர் முடிவுகள் எடுக்க வைக்கக் கூடிய நட்சத்திரம் அது. ஜெயலலிதா வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது 16ஆம் தேதி. கேதுவின் ஆதிக்கமுள்ள 16ஆம் தேதியன்று 5ஆம் தேதிக்குரிய புதனின் நட்சத்திரமான ஆயில்யம் வந்ததால் ஜெயலலிதாவிற்கு இத்தனை சிக்கல்களும் ஏற்பட்டது.

FILE
புதனின் இராசி கன்னி. அந்த கன்னி இராசிக்காரர்தான் வைகோ. அவரை மையமாக வைத்துதானே இந்தப் பிரச்சனை வெடித்துள்ளது. வைகோவின் ம.தி.மு.க.விற்கு இடமளிக்க அ.இ.அ.தி.மு.க. தலைமை முடிவெடுத்துவிட்டதால் தீர்வு ஏற்பட்டுள்ளது.

‘கன்னி மகனை கைவிடேல’ என்று ஒரு பழமொழியே உள்ளது. தன்னுடன் இருக்கும் கன்னிராசிக்காரரை இந்த பழமொழி அறிந்த ஒருவரும் கைவிடமாட்டார்கள். ஏனெனில் கன்னி ராசிக்காரர் உடனிருப்பது எப்போதும் பலமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்