ஊழ‌ல்: ‌ம‌ன்மோக‌ன் ‌பிரதமராக ‌நீடி‌ப்பாரா?

வெள்ளி, 18 மார்ச் 2011 (13:57 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: 2ஜி ஊழல், ஊழல் தடுப்பு ஆணையர் நியமனம் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் மன்மோகன் சிங் அதிகாரமற்ற பிரதமர் என்பது நிரூபணமாகியுள்ளதாகவே பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். இதற்குமேலும் எவ்வளவு காலம் அவர் நீடிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து கூறுங்கள்.

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: இந்திய ஜாதகம் ரிஷப லக்னம், கடக ராசி. இந்த இரண்டுக்குமே ராசியான நிறம் நீலநிறம். தலைப்பாகை இருக்கிறதல்லவா அதுதான் அவருக்கு பெரிய பலத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. சில சின்னங்கள் சிலருக்கு சில வலிமையைக் கொடுக்கும்.

தமிழிற்கு உரிய கிரகம் சந்திரன். சந்திரன் என்பது வெண்மை நிறத்திற்குரிய கிரகம். வெள்ளையாக ஒருவர் வந்து வெள்ளை சட்டையும் போட்டு தொடர்ந்து ஆண்டாரல்லவா? அடுத்தடுத்து ஆட்சி, மக்களிடையே நீங்கா இடம்.

ஒரு பகுதி அல்லது ஒரு நாடு அல்லது ஒரு நிலப்பகுதியை ஆளக்கூடிய கிரகம் எது? அந்த கிரகத்தினுடைய நிறம், அதற்குரிய எண் என்று சிலவற்றை கடைபிடித்தால் வெற்றியைக் கொடுக்கும்.

மற்றவர்கள் கூட நீல நிற தலைப்பாகையுடன் இருக்கிறார்களே என்று கேட்கலாம். அவருடைய ஜாதகம் அதனுடன் ஒத்துழைக்கிறது. ஒரு பெண்ணால் அவருக்கு எல்லா வகையிலும் முன்னேற்றம் என்று அவருடைய ஜாதகத்தில் இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்