‌தி.மு.க. - கா‌ங்‌கிர‌ஸ் உற‌வு எ‌ப்படி இரு‌க்கு‌ம்?

புதன், 16 மார்ச் 2011 (19:38 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: தி.மு.க. - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு சிக்கல் ஏற்பட்டு அதன்பிறகு ஒரு உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாடு தேர்தல் முடியும் வரை சுமூக உறவாக நீடிக்குமா? சிக்கலை உண்டாக்குமா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: சோனியா காந்தி ராசியைப் பார்க்கும் போது, அவர் மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம், தற்பொழுது அவருக்கு நேரம் சரியாக இல்லை என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதனால் அவருக்கு சில பாதிப்புகள், அடுத்தடுத்து சில சவால்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்.

அடுத்ததாக, தி.மு.க. தலைமை ஜாதகம் கொஞ்சம் வலுவாகத்தான் இருக்கிறது. வலுவாக இருந்தாலும், ஏற்கனவே சொன்னதுபடி, பிள்ளைகள் மற்றவர்கள் ஜாதகத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் சிலருடைய ஜாதகம் வலுவாக இருக்கிறது. சிலருடைய ஜாதகம் வலுவிழந்து காணப்படுகிறது.

அவ்வாறு ஒட்டுமொத்தமாக கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது கொஞ்சம் வலுவிழந்த கிரக அமைப்புதான் தற்போது இருக்கிறது. அதனால்தான் இந்த பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி தி.மு.க.விற்கும், காங்கிரசுக்கும் இடையே பனிப்போர் நடப்பதற்கு காரணம் இரண்டு தலைமை கிரகங்களையும் பார்க்கும் போது கொஞ்சம் பலவீனமாக இருப்பதுதான்.

கூச்சல் குழப்பத்துடனேயேதான் இந்தத் தேர்தல் போகும். ஏனென்றால் இராகு கூச்சல் குழப்பத்திற்குரிய கிரகம். மேலும் அரு ஒரு சர்ப கிரகம். ஷேடோ பிளானட். ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை மூட்டி விடுவது, ஒருத்தருக்கு ஒருவர் நம்பாத இருப்பது, மேடையில் கைகோர்ப்பது, கீழே வந்ததும் கைகலப்பாக ஆக்குவது. இதெல்லாம் 13ஆம் தேதிக்கு உரிய குணங்கள். அதேபோல சேம்சைட் கோல் என்பார்களே அதுவும் இந்தத் தேர்தலில் அதிகமாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்