ச‌னி பகவா‌ன் யோகா‌திப‌தியாகவு‌ம் இரு‌‌க்‌கிறாரே?

திங்கள், 14 பிப்ரவரி 2011 (18:11 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: மிதுன ராசிக்காரர்களுக்கு யோகாதிபதி சனி பகவான் என்று கூறியுள்ளீர்கள். சனி பகவான் சங்கட பகவான்தானே?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: எல்லா கிரகங்களும், எல்லோருக்கும் நல்லது செய்யும் என்று அர்த்தம் கிடையாது. மேஷ லக்னம், மேஷ ராசியாக இருந்தால் அவர்களுக்கு குரு பகவான் யோகாதிபதி. ஆனால் ரிஷப லக்னம், ரிஷப ராசியாக இருந்தால் குரு பகவான் யோகாதிபதி கிடையாது.

பொதுவாக குரு என்பது சுப கிரகம். அவ்வளவுதான். அதேபோல, பொதுவாக சனி என்பது பாவ கிரகம். ஆனால், ஒரு ராசிக்கு யோகாதிபதியாகவும், இன்னொரு ராசிக்கு பாவ கிரகமாகவும் வருவார். ராசி, லக்னத்தைப் பொறுத்து இப்படி வித்தியாசப்படுகிறது. ரிஷப ராசிக்கு சனி ஒருவரே மேலான லாபத்தைப் பெற்றுத் தரக்கூடியவர். இதை, பல அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களுடைய ஜாதகத்தைப் பார்த்து தெரிந்து கொண்டிருக்கிறோம்.

நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த ஒருவர் அதே நிறுவனத்தின் முதலாளியாக ஆகியிருக்கிறார், சனி திசையில். இதுபோன்ற அமைப்பையெல்லாம் பார்த்திருக்கிறோம். ரிஷப ராசி, மிதுன ராசி, கன்னி ராசி, துலாம், மகரம், கும்பம் இவர்களுக்கெல்லாம் சனி பிரதான கிரகம். இவர்தான் இவர்களுடைய தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடியவர். இவர் நன்றாக இருந்து, அந்த திசையும் வந்துவிட்டால், ஒன்றுமில்லாத நிலையில் இருந்து பெரிய நிலைக்கு வந்துவிடுவர்.

அதாவது, தெருக்கோடியில் நின்றவர் பல கோடிக்கு அதிபதியாகிவிட்டார் என்று சொல்வார்களே அதுமாதிரி. இதுபோன்று நடைமுறையில் நாங்கள் பார்த்து வியக்கிறோம். சனி கொடுக்க ஆரம்பித்துவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. சனி கொடுக்க ஆரம்பித்துவிட்டால் சங்கரனாலும் தடுக்க முடியாது என்று ஒரு பழமொழி கூட உண்டு. அவ்வளவு விஷயங்கள் சனி பகவானுக்கு உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்