2ஜி ஊழல் ஜெயலலிதாவிற்கு சாதகமா?

வெள்ளி, 11 பிப்ரவரி 2011 (18:15 IST)
த‌‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தி.மு.க., காங்கிரசிற்கு எதிரான ஊழல் அலை இருக்கிறது. ஆனால், அது அ.தி.மு.க.விற்கு சாதகமாக அமைவதற்கான சாத்தியக்கூறுகள், வரும் தேர்தலிலோ அல்லது அது அமைக்கப் போகும் கூட்டணிக்கோ ஏற்படுமா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: கிரக அமைப்புகளை வைத்துப் பார்க்கும் போது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. ஜெயலலிதாவிற்குப் பார்க்கும் போது அவர்களுக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கிறது. இவர் சிம்ம ராசிக்காரர்.

கருணாநிதியினுடைய ஜாதகம் என்று எடுத்துக் கொண்டால், அவருடைய பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் என்று குடும்பத்தைச் சார்ந்த ஜாதகங்களில் ஒன்று இரண்டு சாதகமாக இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் அப்படியில்லை. கிரக அமைப்புகள் நன்றாக இருந்தால் நன்றாக இருக்கும். நன்றாக இல்லையென்றால் நன்றாக இருக்காது. நன்றாக இருந்தால் ஜெயிக்கலாம். மற்றபடி ஜெயலலிதாவிற்கு பெரிய உறுதுணையான ஜாதகம் என்று எதுவும் கிடையாது.

குடும்பத்தைப் பொறுத்தவரையில் கருணாநிதிக்கு பிள்ளைகள், மருமகள், பேரன், பேத்தி ஜாதகம் இதையெல்லாம் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் நிறைய தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் இதையெல்லாம் பார்க்கிறோம். ஒரு குறிப்பிட்ட நகைக்கடை அதிபர் எப்படியென்றால், அவருடைய குடும்பத்தில் யாருக்கு குருப் பலன் அமோகமாக இருக்கிறது, யாருக்கு சுக்கிர திசை நல்ல திசையில் இருக்கிறது என்று பார்த்துவிட்டு அவர்களை முழுமையாக விற்பனையை பார்த்துக் கொள்வதற்கு விட்டுவிடுவார். அவருடைய கையால் கொடுத்து வாங்குவது, முக்கியமான விஷயங்களுக்கு அவரை அனுப்புவது போன்றெல்லாம் உண்டு.

இதேபோல, புதுச்சேரியிலும் நமக்கு தெரிந்தவர் ஒருவர் இருந்தார். அவரும் தேபோலத்தான். அவர் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அவருடைய குடும்பத்தில் யாருக்கு நன்றாக இருக்கிறதோ அவர்களை அழைத்துச் செல்வது, அவர்களுடைய கையால் பூர்த்தி செய்து தருவது போன்றெல்லாம் செய்து கொண்டிருந்தார்.

அதுபோல, அ.தி.மு.க.வை எடுத்துக்கொண்டால் ஜெயலலிதாவை தவிர மற்றவர்களுடைய ஜாதகம் அங்கு வலிமையாகக் கிடையாது. தற்போதும் அவருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஏழரைச் சனி ஒரு தெளிவான தீர்வைக் கொடுக்காது. அவருக்கும் சில தடுமாற்றம், ஊசலாட்டம், முன்னுக்பின் முரணான முடிவுகள் எடுப்பது என்று இந்தச் சனியால் அவர்கள் அலைகழிக்கப்படுவார்கள்.

மே 9 ஆம் தேதி குரு மாறுகிறார். ஜெயலலிதாவிற்கு தற்போது 8ல் குரு இருக்கிறார். "அட்டமத்திலே வாலி பட்டமிழந்தது" என்று சொல்வார்கள். மே 9 ஆம் தேதி குரு 9ஆம் வீட்டிற்கு வருகிறார். "ஓடிப் போனவனுக்கு 9ஆம் இடத்தில் குரு" என்று சொல்வார்கள். ஓடிப் போனவனென்றால் எல்லாவற்றையும் இழந்து, நிர்கதியாக நிற்பவராக இருந்தாலும் அவருக்கு 9ஆம் இடத்தில் குரு இருந்தால் அவர்கள் ஆட்சியைப் பிடிப்பது, ஒரு உயர் நிலைக்கு வருவது, அவரவர்கள் தகுதிக்கு தகுந்த நிலைக்கு வருவது போன்ற நிலைக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஏப்ரல் மாதத்திற்குள் தேர்தல் வந்தால் அது ஜெயலலிதாவிற்குச் சாதகமாக இருக்காது. மே மாதத்தில் தேர்தல் வந்தால் அது அவருக்கு நிச்சயமாகச் சாதகமாக இருக்கும். (9ஆம் தேதிக்கு முன்னாடி வந்தாலும் கூடவா?) அது பரவாயில்லை. ஏனென்றால், குருவிற்கு ஒரு வாரம், 10 நாட்களுக்கு முன்னாடியே அதனுடைய தாக்கம் இருக்கும். அதனால் மே 9 குரு மாற்றம் ஜெயலலிதாவிற்கு பெரிய முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்