ஆ‌ன்‌மீக நாடான இ‌‌ந்‌தியா‌வி‌ல் ஏ‌ன் இ‌வ்வளவு ‌சீ‌ர்கேடுக‌ள்?

வெள்ளி, 10 டிசம்பர் 2010 (18:09 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ஆன்மீகத்திற்கு என்றால் இந்தியாவிற்குப் போ என்று சொல்வார்கள் என்று சொன்னீர்கள். அரவிந்தர் கூட அதைத்தான் சொல்கிறார். இந்தியா ஒரு ஆன்மீக பூமி. அது ஆன்மீகத்திற்கான வழிகாட்டியாக உலகத்திற்கு இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார். ஆனால் இப்படிப்பட்ட ஆன்மீகம், கோயில்களெல்லாம் நிறைந்திருக்கக் கூடிய இந்தியாவில் எங்கு பார்த்தாலும் திருத்தலம், புண்ணியத் தலம், ஆசிரம், ஓடும் நதியெல்லாம் புண்ணியம் என்றெல்லாம் இருக்கும் இங்கு எப்படி இத்தனை பேர் பாவ ஆத்மாக்களாகவும், பெரிய அளவில் ஊழலும் ஏன் நடைபெறுகிறது. ஏன் இந்த அளவிற்கு சீர் கெட்டிருக்கிறது வாழ்க்கை?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: தேவர்கள் என்றால் அசுரர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். என்னதான் பரிகார பூமி, புண்ணிய பூமி இந்தியா என்று சொன்னாலும், துர் ஆத்மாக்கள் என்பது இங்கும் உண்டு. இவ்வளவு பெரிய ஆன்மீக நாட்டில்தான் கடவுள் எதிர்ப்பாளர்கள் மிக அதிகம். உலக நாடுகளில் பார்த்தால் இந்த அளவிற்கான கடவுள் மறுப்பாளர்கள் குறைவு.

இப்படித்தான் அத்தனையையும் சகித்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம். ஆனால் தண்டிக்கப்படுகிறார்கள். தெய்வம் நின்று கொல்லும் அரசன் அன்று கொல்வான் என்பது மாதிரி, (அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லையே?). நடக்காமல் இல்லை, நமக்குத் தெரியாமல் சில விஷயங்கள் இருக்கலாம்.

வெளி உலகத்திற்குத்தான் ஒருவர் கெளரவமாகவும், கம்பீரமாகவும், நிம்மதியாகவும் இருக்கிற மாதிரி இருக்கலாம். ஆனால், வாரிசுகள், சந்ததிகள் பாதிக்கப்படுவதை பார்க்கிறோம். வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத அளவிற்கு தேம்பித் தேம்பி அழுவதும், வெளியில் வந்தும் கெளரவமாக துண்டு போட்டுக் கொண்டு இருப்பவர்களையும் நா‌ம் பார்க்கிறோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்