கோபுரங்கள் பாதிப்பு ஆபத்தின் அறிகுறியா?

வெள்ளி, 29 அக்டோபர் 2010 (18:16 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: கோயில் கோபுரங்களில் விரிசல் ஏற்படுதல், மின்னல் தாக்கி பாதிக்கப்படுவது, இடிந்து விழுதல் போன்றவை ஏதாவது ஆபத்தின் அறிகுறியா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: கோபுரம் என்பது ஒரு அடையாளச் சின்னம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் அரசு சின்னமாகவே அமைக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் அரசையும், ஆட்சியையும் குறிப்பிடக்கூடியது என்று சொல்லலாம்.

கோபுரங்களில் இருக்கும் கலை, பரிணாமங்கள், சிற்பங்கள், எழுந்து நின்றிருக்கக் கூடிய கோபுரங்களின் அமைப்பு, அதற்கு மேல் முத்தாய்ப்பாய் பதித்திருக்கக் கூடிய அந்தக் கலசங்கள் போன்ற இவையெல்லாம் பாதுகாக்கப்படக் கூடியவை.

இதில் சில சென்சிடிவ்வான சில விஷயங்களும் உண்டு. கோபுரக் கலசங்கள் ஏதாவது தவறி விழுந்தாலோ, கோபுரத்தில் விரிசல்கள் அல்லது பின்னங்கள் ஏற்பட்டாலோ பொதுவாக நாட்டினுடைய பொருளாதாரம், நாட்டை ஆள்பவருடைய நிலைமை, பருவ நிலை மாறிப் பொழிதல், தற்கொலை அதிகரித்தல், முர‌ண்பாடான உறவுகள் இதுபோன்ற சீர்கேடுகள் எல்லாம் ஏற்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்