வட‌கிழ‌க்கு ‌பருவ மழை எ‌வ்வாறு இரு‌க்கு‌ம்?

புதன், 27 அக்டோபர் 2010 (17:40 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: வடகிழக்குப் பருவ மழை எவ்வாறு இருக்கும்? எந்த அளவிற்கு நல்லதாக அல்லது பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: வடகிழக்குப் பருவ மழை ஜோதிடப்படி 25ஆம் தேதி முதல் தொடங்கும். அதன் ஆதிக்கமும் அதிகமாக இருக்கும். பலத்த மழை பெய்வதற்கும் வாய்ப்புண்டு. ஐப்பசியிலும் மழை இருக்கும். கார்த்திகையிலும் மழை உண்டு. கார்த்திகை என்பது டிசம்பர் 15 வரை இருக்கிறது. அதனால் டிசம்பர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

எந்த மாவட்டத்திற்கு மழை அவ்வளவாக இருக்காது?

தற்போதைய நிலவரப்படி பார்த்தால் மதுரை, சேலம் பகுதிகளில் கொஞ்சம் குறைவாக மழை பதிவாக வாய்ப்பிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்