இந்திய-அமெரிக்க உறவு பலவீனப்படுமா?

செவ்வாய், 14 செப்டம்பர் 2010 (17:47 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: அணு சக்தி ஒத்துழைப்பு, அணு விபத்து மசோதா இதிலெல்லாம் ஒருவித அமெரிக்க எதிர்ப்பு தொடர்ந்து இருக்கிறது. இப்படி இந்தியாவில் அமெரிக்க தொடர்பான எதிர்ப்பு இந்திய-அமெரிக்க உறவுகளை பலவீனப்படுத்துவதற்கான சாத்தியங்கள் உண்டா?

ஜோ‌திர‌த்னமுனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: இந்திய-அமெரிக்க உறவுகள் பலவீனப்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடையாது. ஆனால், அந்த உறவுகள் இந்தியாவிற்கு அதிக அளவில் ந‌ன்மை தரப்போவது கிடையாது. இந்தியாவினுடைய ரிடப லக்னம், கடக ராசி. அமெரிக்கா தனுசுவினுடைய ஆதிக்கத்தில் வருகிறது. தனுசு என்பது வில், அம்பு. ஆயுதத்திற்குரியது.

அமெரிக்கா எப்போதுமே ஆயுதங்களைக் கையாளக்கூடிய ஒரு நாடு. தனுசு அமெரிக்காவை இயக்குவதால், ஆயுதங்கள் வாங்குவது, விற்பது, ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரை மற்ற இடங்களுக்கு அனுப்பி வைப்பது என்று பாதுகாப்பு அடிப்படை முறையில் அணு வியாபாரம், ஆயுத வியாபரம் செய்யக் கூடிய நாடு. இந்தியாவினுடைய ஜாகதத்திற்கு ஒத்துவராக ஒரு அமைப்பில் இருக்கிறது.

அதனால், இருதரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொண்டாலும், அமெரிக்காவால் நமக்கு மறைமுகமான ஆபத்துகள் நிறைய உண்டு. அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம்தான் நமக்கு.

வெப்துனியாவைப் படிக்கவும்