வட‌கிழ‌க்கு‌‌ப் பருவ மழையு‌ம் பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்துமா?

செவ்வாய், 14 செப்டம்பர் 2010 (17:26 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: நீங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறீர்கள் பருவ மழை காலம் கடந்துபோனால் அதிகமாக பெய்யும் என்று. தற்பொழுது பெய்துவரும் தென்மேற்கு பருவ மழையில் காஷ்மீர் லே பகுதியில் வெள்ளம், பாகிஸ்தானில் வெள்ளம், யமுனையில் வெள்ளம் என்றிருக்கிறது. இதேபோன்று வடகிழக்கு பருவ மழையிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படுமா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: நிச்சயம் உண்டு. தற்பொழுது சுக்ரன் இடம் மாறியுள்ளார். சுக்ரன் 27 நாட்களுக்கு உரு வீடு மாறக்கூடியவர். ஆனால் இந்த வருடம் 4 மாதங்கள் வரை அங்கேயே இருக்கப் போகிறார். அதாவது செப்டம்பர் 3ஆம் தேதியிலிருந்து ஜனவரி 1ஆம் தேதி வரை அங்கிருக்கப் போகிறார்.

மழைக்கோள் என்று சொன்னாலோ சுக்ரன்தான். மழைக்கோள் ஒரே இடத்தில் உட்காரக்கூடியது ஆபத்தை உண்டாக்கக்கூடியது. பேரிழப்புகள், நிலச்சரிவுகள், சினிமா துறையில் சில ஆபத்துகள். சினிமா துறைக்கு, கலைஞர்களுக்கு சில ஆபத்துகள் எல்லாம் தரக்கூடியது.

சுக்ரன்தான் சுமங்கலிப் பெண்களுக்கும் உரிய கிரகம். சுமங்கலிப் பெண்களுக்கும் சில ஆபத்துகள் உண்டாகும். மழையால் மிகப்பெரிய இழப்புகளெல்லாம் வரக்கூடும். அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. இது செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 4 மாதங்களுக்கு இருக்கும். வாகன விபத்துகளும் அதிகரிக்கும்.

ஆனால் வீடு கட்டுவது, வாங்குவதெல்லாம் இனிமேல் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். சுக்ரன்தான் ஆபரணங்களுக்கும் உரிய கிரகம். எனவே ஆபரணங்களின் விலையும் கூடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்