‌தி.மு.க.-கா‌ங்‌கிர‌ஸ் கூ‌ட்ட‌ணி தொடருமா?

புதன், 8 செப்டம்பர் 2010 (16:24 IST)
த‌மி‌ழ்.வெ‌‌ப்து‌னியா.கா‌ம்: தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரையில் - இன்னமும் 6, 7 மாதங்களில் தேர்தல் வரக்கூடிய நிலையில் - தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஒரு பக்கத்திலும், அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கூட்டணி மறுபக்கத்திலும் உள்ள நிலையில், இதே கூட்டணி வரப்போகும் தேர்தலிலும் தொடருமா? ‌நிலைமை எப்படி இருக்கிறது?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கூட்டணி தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. முதல்வருடையதைப் பார்க்கும்போது மிருகசீரிடம், ரிடப ராசி. ஒரு வசீகரமான ராசி இந்த ராசி. ஏனென்றால் இது சுக்ரனுடைய ராசி. சுக்ரன் என்றாலே வசியம், அட்ராக்சன் இதெல்லாம் இருந்து கொண்டு இருக்கும்.

ஜெயலலிதாவினுடையது சிம்மமாக இருக்கிறது. அதே நேரத்தில் அவர்களுக்கு ஏழரை‌ச் சனியும் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஏழரைச் சனி முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த தருணத்தில் சில அமைப்புகள் அவர்களுக்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

கூட்டணிகள் தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், கடைசி நேரத்தில் பிப்ரவரி, மார்ச் காலகட்டத்தில் செவ்வாய் பெயர்ச்சி அடைகிறது. இந்தப் பெயர்ச்சி நடைபெறும் போது சில மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால், கடைசி நேரத்தில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்