பாதமும் பாகமும் ஒன்றா?

திங்கள், 16 ஆகஸ்ட் 2010 (14:27 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: ராசி பலன் எழுதுபவர்கள் பாதங்கள் என்று சொல்கிறார்களே, பாதங்கள் என்பதும், பாகங்கள் என்பதும் ஒன்றானதா? பாதங்கள் என்றால் என்ன?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: அஷ்வினி என்பது ஒரு நட்சத்திரம் கிடையாது. அது ஒரு நட்சத்திரக் கூட்டமைப்பின் பெயர். அந்த அஷ்வினிக்குள் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருக்கிறது. அதைத்தான் அறிவியல் அறிஞர்களும் சொல்லியிருக்கிறார்கள். இந்த நட்சத்திரக் கூட்டமைப்பினுடைய ஒளிக்கற்றை இருக்கிறதே அதை வைத்துதான் முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம், நான்காம் பாகம் என்று ஒளிக்கற்றையை அடிப்படையாக வைத்து நட்சத்திரத் தொகுதியைப் பிரிக்கிறோம்.

இது, ஒரே நட்சத்திரத்தை நான்காகப் பிரிப்பதாக அர்த்தம் ஆகாது. ஒரு நட்சத்திரத்திற்கு ஏகப்பட்ட துணை நட்சத்திரங்கள் உண்டு. துணை நட்சத்திரங்களுடைய கூட்டமைப்பின் ஒளிக்கற்றை சதவிகிதத்தை அடிப்படையாக வைத்து முதல் பாகம், இரண்டாம் பாகம் என்று நான்கு பாகங்களாகப் பிரிக்கிறோம். அதீதமான ஒ‌ளிகளை முதல் பாகத்திலும், அதனைவிட சற்றே ஒ‌ளிக்கற்றை குறைந்ததை இரண்டாம் பாகமாகவும், இந்த மாதிரி 3 பாகம், 4 பாகங்களாகப் பிரிக்கிறோம். இதனை பாகம் என்று சொல்லலாம், பாதம் என்றும் சொல்லலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்